பொது தமிழ் வினா விடை 49
1. உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.(A) பெயர்ச்சொல்
(B) வினைச்சொல்
(C) உரிச்சொல்
(D) இடைச்சொல்
ANS - (D) இடைச்சொல்
2. ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’
எவ்வகையான எச்சம்
(A) வினையெச்சம்
(B) தெரிநிலை வினையெச்சம்
(C) குறிப்பு வினையெச்சம்
(D) முற்றெச்சம்
ANS - (C) குறிப்பு வினையெச்சம்
3. ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
(A) திருவாசகம்
(B) தேவாரம்
(C) திருக்குறள்
(D) பட்டினப்பாலை
ANS - (B) தேவாரம்
4. 4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
(A) அ
(B) ச
(C) உ
(D) ரு
(ANS)- (B) ச
5. மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ?
- என வினவும் வினா
(A) அறி வினா
(B) ஐய வினா
(C) கொடை வினா
(D) ஏவல் வினா
ANS - (C) கொடை வினா
6. பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.
(A) குயில் கூவும்
(B) மயில் அகவும்
(C) கோழி கூவும்
(D) கிளி பேசும்
ANS - (C) கோழி கூவும்
7. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்
(A) மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய்
(B) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
(C) மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
(D) மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
ANS - (B) மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
8. திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
(A) அறநூற்று ஐம்பத்தெட்டு
(B) அறநூற்று எண்பத்தைந்து
(C) நானூற்று ஐம்பத்தெட்டு
(D) அறுநூற்றுப் பத்து
ANS - (A) அறநூற்று ஐம்பத்தெட்டு
9. சொல்லிசை அளபெடை தேர்க
(A) உண்பதூஉம்
(B) பெறாஅவிடின்
(C) தழீஇ
(D) அண்ணன்
ANS - (C) தழீஇ
10. பிரித்தெழுதுக
வெவ்விருப்பாணி
(A) வெம் + இரும்பு + ஆணி
(B) வெம் + இருப்பு + ஆணி
(C) வெம்மை + இரும்பு + ஆணி
(D) வெம்மை + இருப்பு + ஆணி
(ANS) – (C) வெம்மை + இரும்பு + ஆணி
No comments:
Post a Comment