பொது தமிழ் வினா விடை 50
1. பொருந்தா இணையைக் கண்டறிக(A) பையுள் - இன்பம்
(B) பனவன் - அந்தணன்
(C) விபுதர் - புலவர்
(D) அல்கு - இரவு
ANS – (A) பையுள் - இன்பம்
2. பிரித்தெழுதுக
நன்கணியர்
(A) நன்கு + அணியர்
(B) நன் + அணியர்
(C) நான்கு + அணியர்
(A) நன்கு + கணியர்
ANS – (A) நன்கு + அணியர்
3. பொருத்துக :
(a) வைதருப்பம் 1. மதுரகவி
(b) கௌடம் 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம் 3. வித்தாரகவி
(d) மாகதம் 4. சுpத்திரகவி
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 4 3 1 2
(C) 2 1 4 3
(D) 3 4 2 1
ANS - (C) 2 1 4 3
4. ‘விளம்பி’ என்பது -------------- பெயர்
(A) இயற்பெயர்
(B) புனைபெயர்
(C) ஊர்ப்பெயர்
(D) இறைவனின் பெயர்
ANS - (C) ஊர்ப்பெயர்
5. ‘அற்புதப்பழ ஆவணங் காட்டி
அடியனா என்னை ஆளது கொண்’
- பாடியவர் யார்?
(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) திருமூலர்
ANS - (C) சுந்தரர்
6. சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------
(A) எட்டுத்தொகை
(B) பத்துப்பாட்டு
(C) பதினெண் கீழ்க்கணக்கு
(D) பதினெண் மேல்கணக்கு
ANS - (C) பதினெண் கீழ்க்கணக்கு
7. பொருந்தாத இணையைக் கண்டறிக
(A) சிறுபஞ்சமூலம் - காரியாசான்
(B) ஞானரதம் - பாரதியார்
(C) எழுத்து – சி.சு.செல்லப்பா
(D) குயில்பாட்டு – கண்ணதாசன்
ANS - (D) குயில்பாட்டு – கண்ணதாசன்
8. “பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
(A) திருவாசகம்
(B)திருக்குறள்
(C) தேவாரம்
(D)திருத்தொண்டர் புராணம்
ANS - (C) தேவாரம்
9. ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?
(A) உலா
(B) தூது
(C) பரணி
(D) பள்ளு
ANS - (C) பரணி
10. கிறித்தவக்கம்பர் எனப் புகழப்பெறுபவர்
(A) ஜான்பன்யன்
(B) எச்.ஏ.கிருட்டினனார்
(C) ஹென்றி
(C)வீரமாமுனிவர்
ANS - (B) எச்.ஏ.கிருட்டினனார்
No comments:
Post a Comment