LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 51

பொது தமிழ் வினா விடை 51

1. நற்றிணையைத் தொகுப்பித்தவர்
(A) பன்னாடு தந்த மாறன் வழுதி
(B) உக்ரப் பெருவழுதி
(C) இளம் பெருவழுதி
(D) மிளை கிழுhன்
ANS - (A) பன்னாடு தந்த மாறன் வழுத
2. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன.
(A) 33
(B) 133
(C) 13
(D) 1330
ANS - (B) 133
3. பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கபடுகிறார்
(A) புரட்சிக் கவிஞர்
(B) தேசியக் கவிஞர்
(C) உவமைக் கவிஞர்
(D) கவிக்குயில்
ANS - (A) புரட்சிக் கவிஞர்
4. ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வழங்கப்படும் காப்பியம் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவகசிந்தாமணி
(D) வளையாபதி
ANS - (A) சிலப்பதிகாரம்
5. பொருத்துக :
(a) மேதி 1. சிவன்
(b) சந்தம் 2. எருமை
(c) கோதில் 3. அழகு
(d) அங்கணர் 4. குற்றமில்லாத
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1 
(B) 2 3 4 1
(C) 3 1 4 2
(D) 3 2 1 4
ANS - (A) 2 3 4 1
6. பொருத்துக :
தொடர் பொருள்
(a) ஆகாயத்தாமரை 1. மிகுதியாகப் பேசுதல்
(b) ஆயிரங்காலத்துப் பயிர் 2. பொய்யழுகை
(c) முதலைக் கண்ணீர் 3. நீண்ட காலத்திற்குரியது
(d) கொட்டியளத்தல் 4. இல்லாத ஒன்று
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 4 3 1 2
(C) 3 4 1 2
(D) 3 4 2 1
ANS - (A) 4 3 2 1
7. சைவத்திருமுறைகளில் -------------- திருமுறை திருமந்திரம்.
(A) ஏழாவது
(B) பத்தாவது
(C) எட்டாவது
(D) மூன்றாவது
ANS - (B) பத்தாவது
8. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திருமந்திரம்
(D) நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
ANS - (C) திருமந்திரம்
9. தவறானவற்றைத் தேர்வு செய்க.
குமரகுருபரரின் நூல்கள்
(A) கந்தர் கலிவெண்பா
(B) வேதியர் ஒழுக்கம்
(C) நீதிநெறி விளக்கம்
(D) சகலகலாவல்லி மாலை
ANS - (B) வேதியர் ஒழுக்கம்
10. கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி – ஆகிய ஐந்து மூலிகையின் 
எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.
(A) இலை (B) வேர்
(C) பட்டை (D) காய்
ANS - (B) வேர்

No comments:

Post a Comment