பொது தமிழ் வினா விடை 52
1. முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்(A) உழவுத்தொழில்
(B) மீன்வகைகள்
(C) விதைகளின் பெயர்கள்
(D) அனைத்தும்
ANS - (D) அனைத்தும்
2. ‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ - இடம்பெற்றுள்ள காப்பியம்
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) சீவகசிந்தாமணி
(D) குண்டலகேசி
ANS - (C) சீவகசிந்தாமணி
3. பொருள் தருக
‘மயரி’
(A) உறக்கம்
(B) தயக்கம்
(C) மயக்கம்
(D) கலக்கம்
ANS - (C) மயக்கம்
4. திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்
(A) மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று
(B) மூவாயிரத்து இருநூற்று அறுபத்து மூன்று
(C) மூவாயிரத்து மூன்று
(D) மூவாயிரத்து எழுபத்து மூன்று
ANS - (A) மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று
5. மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
(A) எட்டு
(B) ஏழு
(C) பத்து
(D) ஒன்பது
ANS - (C) பத்து
6. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?
(A) திருமூலர்
(B) திருநாவுக்கரசர்
(C) இராமலிங்க அடிகள்
(D) திருஞானசம்பந்தர்
ANS - (A) திருமூலர்
7. ‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’
என்று கூறியவர்
(A) திலகர்
(B) காந்தியடிகள்
(C) வ.உ.சிதம்பரனார்
(D) திருப்பூர் குமரன்
ANS - (B) காந்தியடிகள்
8. இந்தியநாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்
(A) அகத்தியலிங்கம்
(B) குற்றாலலிங்கம்
(C) வைத்தியலிங்கம்
(D) நாகலிங்கம்
ANS - (A) அகத்தியலிங்கம்
9. ‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ - இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்
(A) 1926 – டிசம்பர் - 6
(B) 1936 – டிசம்பர் - 6
(C) 1946 – டிசம்பா – 6
(D) 1956 – டிசம்பர் - 6
ANS - (D) 1956 – டிசம்பர் - 6
10. ‘கோட்டோவியங்கள்’ என்பது
(A) நேர்கோடு வரைவது
(B) கோணக்கோடு வரைவது
(C) வளைகோடு வரைவது
(D) மூன்று கோடும் வரைவது
ANS - (D) மூன்று கோடும் வரைவது
No comments:
Post a Comment