LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 53

பொது தமிழ் வினா விடை 53

1. தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை
(A) பேச்சுக்கலை
(B) ஓவியக்கலை
(C) சிற்பக்கலை
(D) கட்டடக்கலை
ANS - (B) ஓவியக்கலை
2. “நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்றவர்
(A) பாரதியார்
(B) ஷெல்லி
(C) பாரதிதாசன்
(D)இரசூல் கம்சதேவ்
ANS - (D)இரசூல் கம்சதேவ்
3. ‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்
(A) பாடகர்
(B) ஓவியர்
(C) நாட்டியர்
(D) வனைபவர்
ANS - (B) ஓவியர்
4. மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்
(A) வானொலி
(B) பாவரங்கமேடை 
(C) தொலைக்காட்சி
(D) அனைத்தும்
ANS - (D) அனைத்தும்
5. “இரட்டைக்கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?
(A) முடியரசன்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) கண்ணதாசன்
ANS - (B) சுரதா
6. “போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை
(A) சிற்பக் கலை
(B) பேச்சுக்கலை
(C) நாடகக்கலை
(D) ஓவியக்கலை
ANS - (C) நாடகக்கலை
7. ‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
(A) பரிபாடல்
(B) புறநானூறு
(C) திருவாசகம்
(D) தேவாரம்
ANS - (A) பரிபாடல்
8. முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை
(A) அன்னிபெசண்ட் அம்மையார்
(B) தில்லையாடி வள்ளியம்மை
(C) முத்துலட்சுமி ரெட்டி
(D) இராணிமங்கம்மாள்
ANS - (B) தில்லையாடி வள்ளியம்மை
9. ‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்
(A) பாவாணர்
(B) கம்பர்
(C) திரு.வி.க
(D) உவே.சா
ANS - (B) கம்பர்
10. ‘அந்தமான்’ – எவ்வகை மொழி
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொது மொழி
(D) ஓரெழுத்து ஒருமொழி
ANS - (C) பொது மொழி

1 comment: