பொது தமிழ் வினா விடை 54
1. தொகைச் சொல்லை விரித்தெழுதுகநானிலம்
(A) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
(B) குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை
(C) குறிஞ்சி. முல்லை, மருதம், பாலை
(D) முல்லை, மருதம், நெய்தல், பாலை (C) குறிஞ்சி. முல்லை, மருதம், பாலை
ANS - (A) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல
2. பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க
உருவகம்
(A) பாதமலர்
(B) அடிமலர்
(C) தேன் தமிழ்
(D) மொழியமுது
ANS - (C) தேன் தமிழ்
3. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி ----------- உள்ளன.
(A) நாற்பத்திரண்டு
(B) ஐம்பத்திரண்டு
(C) அறுபத்திரண்டு
(D) எழுபத்திரண்டு
ANS - (A) நாற்பத்திரண்டு
4. பொருத்துக :
(a) பெயர்ச்சொல் 1. வந்தான்
(b) வினைச்சொல் 2. ஐந்தும் ஆறும்
(c)இடைச்சொல் 3. மாவீரன்
(d) உரிச்சொல் 4. வேலன்
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 4 1 2 3
(C) 3 4 1 2
(D) 4 1 3 2
ANS - (B) 4 1 2 3
5. ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது?
“Indian Succession Act”
(A) இந்தியச் சான்றுச் சட்டம்
(B) இந்திய உரிமைச் சட்டம்
(C) இந்திய வாரிசுரிமை சட்டம்
(D) இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
ANS - (C)இந்திய வாரிசுரிமைச ;சட்டம்
6. என்னே, தமிழின் இனிமை! – என்பது
(A) செய்தித் தொடர்
(B) விழைவுத் தொடர்
(C) உணர்ச்சித் தொடர்
(D) உடன்பாட்டுத் தொடர்
ANS - (C) உணர்ச்சித் தொடர்
7. “திருத்தபடாத அச்சுப்படி” இதற்கு சரியான ஆங்கில சொல்லை காண்க?
(A) “Fake news
(B) Layout
(C) Green Proof
(D) Bulletin
Ans - (C) Green Proof
8. முற்றியலுகரச் சொல்’ – யாது?
(A) கோங்கு
(B) பாலாறு
(C) மார்பு
(D) கதவு
ANS - (D) கதவு
9. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?
(A) பொழிப்பு எதுகை
(B) இணை எதுகை
(C) ஓரூஉ எதுகை
(D) கூழை எதுகை
ANS - (B)இணை எதுகை
10. பொருத்துக :
(a) முருகன் உழைப்பால் உயர்ந்தான் எழுவாய் வேற்றுமை
(b) பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் இரண்டாம் வேற்றுமை
(c) அமுதா பாடத்தை எழுதினாள் மூன்றாம் வேற்றுமை
(d) கண்ணன் வந்தான் நான்காம் வேற்றுமை
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 1 2 4 3
(C) 3 2 1 4
(D) 4 2 3 1
ANS - (A) 3 4 2 1
No comments:
Post a Comment