பொது அறிவியல் வினா விடைகள் 53
1. உண்மைக் கரைசலுக்கு எ.கா. என்ன?(A) சர்க்கரைக் கரைசல்
(B) சுண்ணாம்பு நீரின் கலவை
(C) ஊறுகாய்
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. ஒளியானது கூழ்மத்தின் வழியே செலுத்தப்படும் போது அளவில்
பெரிதாக உள்ள கூழ்மத்துகள்களில் சிதறடிக்கப்பட்டு கண்ணுக்குத்
தெரிவது எந் நிகழ்வு?
(A) ஒளிமின் விளைவு
(B) விளிம்பு விளைவு
(C) டின்டால் விளைவு
(D) இவற்றுள் எதுவுமில்லை
3. உண்மைக் கரைசலின் துகளின் அளவு என்ன?
(A) 10 A^0 முதல் 100 A^0 வரை
(B) 1 A^0 முதல் 10 A^0 வரை
(C) 10 A^0 முதல் 1000 A^0 வரை
(D) 1000 A^0 மேல்
4. கூழ்மக் கரைசலின் துகளின் அளவு என்ன?
(A)10 A^0 முதல் 1000 A^0 வரை
(B) 1000 A^0 மேல்
(C)1 A^0 முதல் 10 A^0 வரை
(D) இவற்றுள் எதுவுமில்லை
5. கரைபொருள் திண்மமாகவும் கரைப்பான் வாயுவாகவும்
உள்ளதற்கு எ.கா. எது?
(A) சர்க்கரைக் கரைசல்
(B) புகை
(C) பால்
(D) மேகம்
6. கரைபொருள் வாயுவாகவும், கரைப்பான் நீர்மமாகவும் உள்ளதற்கு
எ.கா. எது?
(A) புகை
(B) மேகம்
(C) சோடா நீர்
(D) பால்
7. ஆழ்கடல் மூழ்குதலில் பயன்படுவது எது?
(A) ஹைட்ரஜன்
(B) நைட்ரஜன்
(C) ஹலியம் - ஆக்ஸிஜன்
(D) இவற்றுள் எதுவுமில்லை
8. கரைபொருள் நீர்ம்மாகவும் கரைப்பான் திண்மமாகவும் உள்ளதற்கு
எ.கா. எது?
(A) பால்
(B) மேகம்
(C) பாலாடைக் கட்டி
(D) சர்க்கரைக் கரைசல்
9. கரைபொருள் நீர்மமாகவும் கரைப்பான் வாயுவாகவும் உள்ளதற்கு
எ.கா. எது?
(A) புகை
(B) பால்
(C) மேகம்
(D) தக்கை
10. கரைபொருள் வாயுவாகவும் கரைப்பான் திண்மமாகவும்
உள்ளதற்கு எ.கா. எது?
(A) தக்கை
(B) பாலாடைக் கட்டி
(C)உலோகக் கலவை
(D) சோடா நீர்
விடைகள்
1.A
2.C
3.B
4.A
5.B
6.C
7.C
8.C
9.C
10.A
No comments:
Post a Comment