பொது தமிழ் வினா விடை 64
1. ‘அடவிமலை யாறெல்லாம் கடந்து போகித்திண்ணமுறு தடந்தோளும் உளமுங் கொண்டு’ – அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான
இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்.
(A) உவமைத்தொகை, உரிச்சொற்றொடர்
(B) உம்மைத்தொகை, உருவகம்
(C) அடுக்குத்தொடர், வினைத்தொகை
(D) உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
Ans - (D) உம்மைத்தொகை, உரிச்சொற்றொடர்
2. இளமைப் பெயர்களைப் பொருத்துக.
(a) மான் 1. குருளை
(b) கீரி 2. குஞ்சு
(c) கோழி 3. கன்று
(d) சிங்கம் 4. பிள்ளை
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 3 4 1 2
(C) 3 4 2 1
(D) 4 3 2 1
Ans - (C) 3 4 2 1
3. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(A) கண்ணன் காலையில் நாஷ்டா சாப்பிட்டான்
(B) அலுவலகத்தில் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும்
(C) கோவிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது.
(D) பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
Ans - (C) கோவிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது.
4. சரியான இலக்கணக் குறிப்பைப் பொருத்துக.
(a) மடக்கொடி 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(b) தேரா மன்னா 2. பண்புத்தொகை
(c) செங்கோலன் 3. வினைத்தொகை
(d) செய்கொல்லன் 4. அன்மொழித்தொகை
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 2 3 1 4
(C) 3 1 2 4
(D) 4 1 2 3
Ans - (D) 4 1 2 3
5. பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, கீழ்க்கண்ட தொகுப்பிலிருந்து உரிய விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) தெலுங்கு 1. வடமொழி
(b) தமிழ் 2. வடதிராவிட மொழி
(c) மால்தோ 3. தென்திராவிட மொழி
(d) சமஸ்கிருதம் 4. நடுதிராவிட மொழி
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 3 2 4 1
(C) 1 2 4 3
(D) 4 3 2 1
Ans - (D) 4 3 2 1
6. கீழ்க்கொடுக்கப்பட்டவற்றுள் இயல்பு புணர்ச்சி சொல்லைத் தேர்க
(A) வாழைப்பழம்
(B) பொற்குடம்
(C) பாசிலை
(D) பொன்வளையல்
Ans - (D) பொன்வளையல்
7. ‘ஆடுவாயா’ என்ற வினாவிற்குப் ‘பாடுவேன்’ என்று விடையளித்தல்
(A) நேர் விடை
(B) இனமொழி விடை
(C) உற்றது உரைத்தல் விடை
(D) உறுவது கூறல் விடை
Ans - (B) இனமொழி விடை
8. ‘கார் அறுத்தான்’ – எவ்வகை ஆகுபெயரைச் சார்ந்தது?
(A) சினையாகுப்பெயர்
(B) தொழிலாகுப்பெயர்
(C) பண்பாகுப்பெயர்
(D) காலவாகுப்பெயர்
Ans - (D) காலவாகுப்பெயர்
9. பொருளறிந்து பொருத்துக.
(a) அரசன் வந்தது 1. பால் வழு
(b) கபிலன் பேசினாள் 2. எண் வழு
(c) குயில்கள் கூவியது 3. இடவழு
(d) கமலா சிரித்தாய் 4. திணை வழ
(a) (b) (c) (d)
(A) 4 1 3 2
(B) 4 1 2 3
(C) 1 4 3 2
(D) 3 2 1 4
Ans - (B) 4 1 2 3
10. கீழ்வரும் சொற்றொடர்களில் உரிச்சொற்றொடரை எழுதுக.
(A) விரிகடல் (B) கடிமுரசு
(C) முகத்தாமரை (D) கரகமலம்
Ans - (B) கடிமுரசு
No comments:
Post a Comment