LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 65

பொது தமிழ் வினா விடை 65

1. ஐந்தடிமுதல் பன்னிரெண்டடி வரை வரும் பா
(A) குறள் வெண்பா
(B) சிந்தியல் வெண்பா
(C) இன்னிசை வெண்பா
(D) பஃறொடை வெண்பா
Ans - (D) பஃறொடை வெண்பா

2. ஒருதலைக் காமம் என்பது
(A) அன்பின் ஐந்திணை
(B) பாடாண் திணை
(C) கைக்கிளை
(D) பெருந்திணை
Ans - (C) கைக்கிளை

3. கீழ்வருவனவற்றுள் காலவாகு பெயரைக் கண்டறிக.
(A) திசம்பர்ப் பூ பூத்தது.
(B) இந்தியா வென்றது.
(C) வெள்ளை அடித்தான்
(D) பொங்கல் உண்டான
Ans - (A) திசம்பர்ப் பூ பூத்தது.

4. உமறுப்புலவர் யாருடைய வேண்டுகோளின்படி சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார்?
(A) அப்துல் காதிர் மரைக்காயர்
(B) அபுல் காசிம்
(C) காதிர் முகைதீன்
(D) கடிகை முத்துப் புலவர் 
Ans - (A) அப்துல் காதிர் மரைக்காயர்

5. ‘ஒன்றுகொலாம்’ என்னும் திருப்பதிகம் பாடி இறந்த பிள்ளையை எழுப்பியவர்?
(A) ஞான சம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
Ans - (B) திருநாவுக்கரசர்

6. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எனத் திரு.வி.க.
கூறுவது
(A) கம்பராமாயணம்
(B) சிலப்பதிகாரம்
(C) பெரியபுராணம்
(D) மகாபாரதம்
Ans - (C) பெரியபுராணம்

7. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை - இவ்வடி இடம் பெற்ற நூல்
(A) பரிபாடல்
(B) நற்றிணை
(C) மதுரைக்காஞ்சி
(D) நெடுநல்வாடை
Ans - (A) பரிபாடல்

8. ‘காயும் வில்லினன், கல்திறள் தோளினன்’ – எனப் போற்றப்படுபவன்
(A) இராமன்
(B) அர்ச்சுனன்
(C) குகன்
(D) கர்ணன்
Ans - (C) குகன்

9. ‘மணநூல்’ எனப் புகழப்பெற்றது
(A) சிலப்பதிகாரம்
(B) சீவக சிந்தாமணி
(C) கம்பராமாயணம்
(D) குண்டலகேசி
Ans - (B) சீவக சிந்தாமணி

10. மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் - யார்?
(A) பரஞ்சோதி முனிவர்
(B) குமரகுருபரர்
(C) நக்கீரர்
(D) சீத்தலைச் சாத்தனார்
Ans - (B) குமரகுருபரர்

No comments:

Post a Comment