LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 66

பொது தமிழ் வினா விடை 66

1. பத்துப்பாட்டில் பாண்டிய நெடுஞ்செழியனை தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல் எது.
(A) திருமுருகாற்றுபடை - மதுரைகாஞ்சி
(B) மலைபடுகடாம் - பட்டினப்பாலை
(C) நெடுநெல்வாடை - மதுரைகாஞ்சி 
(D) முல்லைப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
Ans - (C) நெடுநெல்வாடை - மதுரைகாஞ்சி

2. பொருந்தாத தொடரைக் குறிப்படுக.
(A) உலா - ஐந்துவகைப்பருவம்
(B) கலம்பகம் - பதினெட்டு உறுப்புகள்
(C) பிள்ளைத்தமிழ் - பத்துப் பருவங்கள்
(D) பரணி - ஐநூற்றி ஒன்பது தாழிசைகளைக் கொண்டது.
Ans - (A) உலா - ஐந்துவகைப்பருவம்

3. எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை தமிழாசிரியராக எவ்வூரில் பணியாற்றினார்?
(A) தூத்துக்குடி
(B) சாயாபுரம்
(C) திருநெல்வேலி
(D) நாகலாபுரம்
Ans - (B) சாயாபுரம்

4. மடப்பிடி யார்?
(A)சீதை
(B) பாஞ்சாலி
(C) மாதவி
(D) கண்ணகி
Ans - (B) பாஞ்சாலி

5. பொருள் தருக.
சதுரங்கச்சேனை
(A) யானைப் படை
(B) குதிரைப் படை
(C) தேர்ப் படை
(D) நால்வகைப் படை
Ans - (D) நால்வகைப் படை

6. ‘பெருமாள் திருமொழி’. ‘முகுந்தமாலை’ - இநநூல்கள் எழுதப்பட்ட மொழி
(A) தமிழ், வடமொழி
(B) வடமொழி, ஆங்கிலம்
(C) இலத்தீன், கிரீக்கு
(D) தமிழ், இலத்தீன்
Ans - (A) தமிழ், வடமொழி

7. அப்பூதியடிகள் பிறந்தவூர்
(A) திருவழுந்தூர்
(B) திருவாதவூர்
(C) திங்களுர்
(D) திருநாவலூர்
Ans - (C) திங்களுர்

8. உரிய விடையைத் தேர்ந்தெழுதுக. ‘அடிகள் நீரே அருளுக’ என்றவர் யார்? 
(A) சீத்தலைச் சாத்தனார்
(B) இளங்கோவடிகள்
(C) திருத்தக்கத் தேவர்
(D) நாதக்குத்தனார்
Ans - (A) சீத்தலைச் சாத்தனார்

9. ‘சூலை’ என்பது
(A) கண் நோய்
(B) வயிற்று நோய்
(C) இதய நோய்
(D) கழுத்து நோய்
Ans - (B) வயிற்று நோய்

No comments:

Post a Comment