LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 67

பொது தமிழ் வினா விடை 67

1. ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) ஐங்குநுறூறு
(D) பரிபாடல்
Ans - (B) புறநானூறு

2. ‘சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ இவ்வடிகள்
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) புறநானூறு
(D) அகநானூறு
Ans - (C) புறநானூறு

3. பொருத்துக:
(a) அரி 1. பனையோலைப்பெட்டி
(b) செறு 2. புதுவருவாய்
(c) யாணர் 3. வயல்
(d) வட்டி 4. நெற்கதிர்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 1 2 4 3
(C) 3 4 1 2
(D) 4 2 3 1
Ans - (A) 4 3 2 1

4. கம்பராமாயணம் ------------------------ நூல்
(A) முதல்நூல்
(B)நாடகநூல்
(C) வழிநூல்
(D) மொழிபெயர்ப்புநூல் 
Ans - (C) வழிநூல்

5. “குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) நாலடியார்
(B) ஏலாதி
(C) திரிகடுகம்
(D) முதுமொழிக்காஞ்சி
Ans - (D) முதுமொழிக்காஞ்சி

6. ‘கல்லார் அறிவிலாதார்’ என்று கூறும் நூல்
(A) நாலடியார்
(B) திருக்குறள்
(C) இன்னாநாற்பது
(D) ஏலாதி
Ans - (B) திருக்குறள்

7. ------------------- என்ப உளவோ கருவியாற் அறிந்து செயின்
(A) அருவினை
(B) நல்வினை
(C) தீவினை
(D) தன்வினை
Ans - (A) அருவினை

8. ஏலாதி ------------------------ வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
(A) எழுபத்தொரு
(B) எண்பத்தொரு
(C) ஐம்பத்தொரு
(D) முப்பத்தொரு
Ans - (B) எண்பத்தொரு

9. “கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம்பெற்றுள்ள நூல்
(A) திரிகடுகம்
(B) நாலடியார்
(C) நான்மணிக்கடிகை
(D) சிறுபஞ்சமூலம்
Ans - (D) சிறுபஞ்சமூலம்

10. குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ------------------- நாட்களுக்குள் உடலில் சுரந்துவிடும்
(A) 30 நாட்கள்
(B) 25 நாட்கள்
(C) 3 மாதங்கள்
(D) 21 நாட்கள்
Ans - (D) 21 நாட்கள்

No comments:

Post a Comment