LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 68

பொது தமிழ் வினா விடை 68

1. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்
(A) ஆட்டனந்தி ஆதிமந்தி
(B) மாங்கனி
(C) சேரமான் காதலி
(D) அங்கயற்கண்ணி
Ans - (C) சேரமான் காதலி 

2. கீழ்க்காண்பவற்றுள் கம்பர் எழுதாத நூல் எது?
(A) சடகோபரந்தாதி
(B) சரஸ்வதி அந்தாதி
(C) திருக்கை வழக்கம்
(D) தொன்னூல் விளக்கம்
Ans - (D) தொன்னூல் விளக்கம்

3. பாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்கக் கவிஞர்
(A) வால்ட் விட்மன்
(B) ஹோர்ட்ஸ்வொர்த்
(C) கீட்ஸ்
(D) ஷேக்ஸ்பியர்
Ans - (A) வால்ட் விட்மன்

4. தமிழர்களின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று
(A) சிலம்பாட்டம்
(B) ஒயிலாட்டம்
(C) ஏறுதழுவுதல்
(D) கபடி ஆட்டம்
Ans - (A) சிலம்பாட்டம்

5. ‘முக்கூடற்பள்ளு’ எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கைக் கொண்டுள்ளது?
(A) தஞ்சாவூர்
(B) மதுரை
(C) ஈரோடு
(D) திருநெல்வேலி
Ans - (D) திருநெல்வேலி

6. ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) புழமொழி
(B) திருக்குறள்
(C) தேவாரம்
(D) திருவாசகம்
Ans - (B) திருக்குறள்

7. “திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத்
தெரிந்திருக்காது” என்று கூறியவர்
(A) கி.ஆ.பெ.விசுவநாதம்
(B) இ.ரா.கிருஷ்ணமூர்த்தி
(C) ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(D) பரிமேலழகர்
Ans - (A) கி.ஆ.பெ.விசுவநாதம்

8. ‘வீரமாமுனிவரைப் போல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்’
(A) புண்டிதமணி கதிரேசன் செட்டியார்
(B) பாண்டித்துரைத் தேவர்
(C) அயோத்திதாச பண்டிதர்
(D) பேரறிஞர் அண்ணா
Ans - (C) அயோத்திதாச பண்டிதர்

9. எள்செடியின் விதையில் இருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே இத்திருநாள் 
(A) கார்த்திகை தீபத் திருநாள்
(B) தமிழர் திருநாள்
(C) விசாகத் திருநாள்
(D) தீபாவளி
Ans - (D) தீபாவளி

10. ‘சித்திரக்காரப் புலி’ என அழைக்கப்படுபவர்
(A) நரசிம்மவர்ம பல்லவன்
(B) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
(C) இரண்டாம் குலோத்துங்கன்
(D) இராசராச சோழன்
Ans - (B) முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

No comments:

Post a Comment