LATEST

Friday, April 3, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 65

பொது அறிவியல் வினா விடைகள் 65

1. சோடியம் அணு நேர்மின் அயனியாக மாறும் தன்மை உடையது.
இதன் அணு எண் 11 < 2, 8, 1 > , எனில் சோடியம் நேர்மின்அயனியல்
உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை -------------------
(A) 9 

(B) 10
(C) 11 
(D) 12
 

2. ஓர் அணு எலக்ட்ரானை இழக்கும் போது நேர்மின் அயனியாக
மாறுகிறது. Fe^2+ என்ற இரும்பு அயனி இழந்துள்ள எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை --------------
(A) 2 

(B) 3 
(C) 0 
(D) 1
 

3. ஒரு சேர்மம் என்பது அமில மற்றும் காரத் தொகுதிகளை
உடையது. ஜிங்க் சல்பேட் என்ற சேர்மத்தில் உள்ள காரத் தொகுதி -----
--------
(A) ஜிங்க் சல்பேட் 

(B) சல்பேட் அயனி
(C) இரண்டும் 

(D) இவற்றுள் எதுவுமில்லை
 

4. பல அணுக்களைக் கொண்ட அயனி, பலஅ ணு அயனித் தொகுதி
எனப்படும். கீழ்க்கண்டவற்றில் பல அணு அயனித் தொகுதி எது?
(A) Cl- 

(B) O2- 
(C) I- 
(D) NH+4
 

5. ஓர் அணு எலக்ட்ரானை ஏற்றால் அது எதிர்மின் அயனியாகமாறும்.
கீழ்க்கண்டவற்றில் ஓரணு எதிர்மின் அயனியை வட்டமிடுக.
(A) CN- 

(B) PO4 3- 
(C) I- 
(D) NO2-
 

6. ஒரு சேர்மத்தின் இயைபை குறியீடுகள் மூலம் குறிப்பிடுவது
வேதிவாய்பாடு ஆகும். சோடியம் கார்பனேட்டின் சரியான
வேதிவாய்ப்பாட்டை எழுது?
(A) Na2 <cos>2, 

(B) 2NaCo3
(C) Na2CO3 

(D) இவற்றுள் எவுவுமில்லை
 

7. பொருத்துக.
(1) Cl - பல அணு எதிர்மின் அயனி
(2) Cr2+ - ஓரணு எதிர்மின் அயனி
(3) NH4+ - ஓரணு நேர்மின் அயனி
(4) PO43- - பல அணு நேர்மின் அயனி
(A) 2 3 4 1
(B) 2 4 3 1
(C) 2 3 1 4
(D) 3 2 4 1
 

8. பொருந்தாதவற்றை எடுத்தெழுதுக.
(A) NO3 - 

(B) NO2 - 
(C) MnO4 - 
(D) Cl-
 

9. கீழ்க் கண்டவற்றுள் பொருந்தாதவற்றை கண்டுபிடிக்கவும்?
(A) Bacl2 

(B) NaNO3 
(C) MgSO4- 
(D) CU2O
 

10. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 13 மில்லியன் சேர்மங்களில்
91% சேர்மங்கள் ----------- அடங்கிய சேர்மங்கள் ஆகும்?
(A) ஆக்ஸிஜன் 

(B) கார்பன் 
(C) நைட்ரஜன் 
(D) ஹைட்ரஜன்
விடைகள்

1.B 
2.A 
3.A 
4.D 
5.C
6.C 

7.A
8.D 
9.A 
10.B

No comments:

Post a Comment