பொது அறிவியல் வினா விடைகள் 69
1. இரண்டு அல்லது மேற்பட்ட அணுக்கள் இணைந்து நிலைப்புத்தன்மை கொண்ட மூலக்கூறு உருவாவதற்கு, அணுக்களுக்கிடையே
நிலவும் கவர்ச்சி விசையே ----------- எனப்படும்.
(A) மூலக்கூறு விசை
(B) வேதிப்பிணைப்பு
(C) அயனிப் பிணைப்பு
(D) இவற்றுள் எதுவுமில்லை
2. எண்ம விதியை வெளியிட்டவர் யார்?
(A) கில்பர்ட் நியூட்டன் லூயிஸ்
(B) மோஸ்லே
(C) சாட்விக்
(D) ரூதர்போர்டு
3. கூலூம்பிக் கவர்ச்சி விசை ---------------- என்றும்
அழைக்கப்படுகிறது.
(A) அயனி விசை
(B) சகப் பிணைப்பு
(C) ஈதல் சகப் பிணைப்பு
(D) நிலை மின்னியல் கவர்ச்சி விசை
4. எலக்ட்ரான் பரிமாற்றத்தின் விளைவாக உருவாகும் நேர்
அயனியும் எதிர் அயனியும் ஒன்றுக்கொன்று நிலை மின்னியல் கவர்ச்சி
விசையால் இணைவதால் உருவாகும் பிணைப்பு ---------------- பிணைப்பு
எனப்படும்.
(A) அயனிப் பிணைப்பு
(B) சகப் பிணைப்பு
(C) ஈதல் சகப் பிணைப்பு
(D) இவற்றுள் எதுவுமில்லை.
5. சோடியம் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு என்ன?
(A) 2, 8, 7
(B) 2, 8
(C) 2, 8, 8
(D) 2, 8, 1
6. மெக்னீசியத்தின் அணு எண் எவ்வளவு?
(A) 12
(B) 15
(C) 18
(D) 17
7. அணுக்களுக்கிடையே அதிக எண்ணிக்கையில் பிணைப்புகள்
உருவாகும் போது அதிக எண்ணிக்கையிலான அணுக்கள் நிலையான -
----------- எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன?
(A) மும்மை
(B) எண்ம
(C) ஓர்
(D) இரு
8. பிணைப்பில் பங்கு பெறாத எலக்ரான் என்பது ---------------------
(A) தனித்த எலக்ட்ரான்
(B) பங்கீடு எலக்ட்ரான்
(C) கவர்ச்சி விசை எலக்ட்ரான்
(D) இவற்றுள் எதுவுமில்லை
9. எண்ம விதிப்படி மந்த வாயுக்கள் இயற்கையால் நிலைப்புத் தன்மை
உடையவை. இதற்கு காரணமாக அமைவது வெளிவட்டப்பாதையில்
உள்ள -------------- எலக்ட்ரான்கள் ஆகும்.
(A) ஏழு
(B) ஆறு
(C) ஐந்து
(D) எட்டு
10. வேதிவினையில் எலக்ட்ரானை இழந்து நேர் அயனியை
உருவாக்குவது எது?
(A) குளோரின்
(B) லித்தியம்
(C) புரின்
(D) இவற்றுள் எதுவுமில்லை
விடைகள்
1.B
2.A
3.D
4.A
5.D
6.A
7.B
8.A
9.D
10.B
No comments:
Post a Comment