பொது தமிழ் வினா விடை 70
1. “கடம்” என்ற சொல்லின் பொருள்(A) முகம்
(B) கைகள்
(C) உடம்பு
(D) இடுப்பு
Ans - (C) உடம்பு
2. அகத்துறுப்பு என்பது
(A) பல்
(B) மனத்தின் உறுப்பு அன்பு
(C) இதயம்
(D) வயிறு
Ans - (B) மனத்தின் உறுப்பு அன்பு
3. “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்”
– என்று கூறிய அறிஞர்
(A) தேவநேயப் பாவாணர்
(B) பாரதிதாசன்
(C) கால்டுவெல்
(C) ஜி.யு.போப்
Ans - (C) கால்டுவெல்
4. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?
(A) சுகலகலா வல்லி மாலை
(B) பூங்கொடி
(C) மணிக்கொடி
(D) உரிமை வேட்கை
Ans - (B) பூங்கொடி
5. “நற்கலை” என்று அழைக்கப்படும் கலை
(A) கட்டடக் கலை
(B) சிற்பக் கலை
(C) ஓவியக் கலை
(D) அழகுக் கலை
Ans - (D) அழகுக் கலை
6. “கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்
(A) புளியங்குடி
(B) சிறுகூடல் பட்டி
(C) மாங்குளம்
(D) இடையன்குடி
Ans - (D) இடையன்குடி
7. பொருத்துக :
திணை பொழுது
(a) குறிஞ்சி 1. எற்பாடு
(b) முல்லை 2. நண்பகல்
(c) மருதம் 3. மாலை
(d) நெய்தல் 4. யாமம்
(e) பாலை 5. வைகறை
(a) (b) (c) (d) (e)
(A) 4 3 5 1 2
(B) 2 1 4 5 3
(C) 5 4 1 2 3
(D) 3 1 2 4 5
Ans - (A) 4 3 5 1 2
8. ‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்
(A) தயார் செய்தல்
(B) பாட்டுப்பாடுதல்
(C) மறையும் நேரம்
(D) துன்பப்படுதல்
Ans - (C) மறையும் நேரம்
9. “வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்
(A) பாரதிதாசன்
(B) கவிமணி
(C) பாரதியார்
(D) அழ.வள்ளியப்பா
Ans - (C) பாரதியார்
10. “ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்
(A) மாறனலங்காரம்
(B) காரிகை
(C) தண்டியலங்காரம்
(D) நன்னூல்
Ans – (C) தண்டியலங்காரம்
No comments:
Post a Comment