LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 73

பொது தமிழ் வினா விடை 73

1. இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்
(A) குருவை வணங்க கூசிநிற்காதே
(B) நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
(C) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே
(D) பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
Ans - (C) கோனோக்கி வாழும் குடிபோல் நிற்காதே

2. ‘உலாமடல்’ என்னும் நூலின் ஆசிரியர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) செயங்கொண்டார்
(C) கம்பர்
(D) பெருஞ்சித்திரனார்
Ans - (B) செயங்கொண்டார்

3. உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துக்கள்
(A) க் ங்
(B) ஞ் ட்
(C) ய் ர்
(D) ப் ம்
Ans - (D) ப் ம்

4. உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்
(A) கால்டுவெல் - கெல்லட்
(B) கமில் சுவலபில் - மாக்சுமுல்லர்
(C) ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்
(D) ஹிப்பாலஸ் - பிளைநி
Ans - (C) ஜி.யு.போப் - சூலியல் வின்சோன்

5. கண்ணன் என்பது ----------------- பகுபதம் ஆகும்.
(A) பொருட்பெயர்
(B) சினைப்பெயர்
(C) பண்புப்பெயர்
(D) வினைப்பெயர்
Ans - (B) சினைப்பெயர்

6. நான், யான் என்பன
(A) தன்மை ஒருமைப் பெயர்கள்
(B) தன்மைப் பன்மைப் பெயர்கள்
(C) படர்க்கைப் பெயர்கள்
(D) முன்னிலைப் பெயர்கள்
Ans - (A) தன்மை ஒருமைப் பெயர்கள்

7. “உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்” –
(A) திருக்குறள்
(B) பதிற்றுப்பத்து
(C) புறநானூறு
(D) திருவாசகம்
Ans - (D) திருவாசகம்

8. மேரி கியூரி – பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது? 
 (A) 1911
(B) 1934
(C) 1903
(D) 1905
Ans - (C) 1903

9. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
(A) கவிஞர் முத்துலிங்கம்
(B) கவியரசர் கண்ணதாசன்
(C) கவிஞா வெ.இராமலிங்கனார்
(D) கவிஞர் பாரதிதாசன்
Ans - (C) கவிஞர் வெ.இராமலிங்கனார்

10. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?
(A) 1956
(B) 1986
(C) 1990
(D) 1927
Ans - (C) 1990

No comments:

Post a Comment