பொது தமிழ் வினா விடை 74
1. “வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்(A) காந்தியடிகள்
(B) ஜவஹர்லால் நேரு
(C) வல்லபாய் பட்டேல்
(D) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Ans - (D) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
2. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) திருக்குறள்
(D) பதிற்றுப்பத்து
Ans - (B) புறநானூறு
3. நேரு மகளுக்கு எழுதிய கடித்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?
(A) உணவு
(B) உடல் நலம்
(C) நூல்கள்
(D) உடற்பயிற்சி
Ans - (C) நூல்கள்
4. பட்டினம், பாக்கம் என்றழைப்பது
(A) மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
(B) வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
(C) காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
(D) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
Ans - (D) கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
5. தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
(A) 1949இல் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார்
(B) 1954இல் காமராசர் முதலமைச்சராக இருந்தார்
(C) 1944இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தார்
(D) 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதலமைச்சராக இருந்தார்
Ans - (C) 1944இல் பிரகாசம் முதலமைச்சராக இருந்தாh
6. யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?
(A) பாரி
(B) பேகன்
(C) அதியமான்
(D) ஓரி
Ans - (C) அதியமான்
7. உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்.
- இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
(A) சுpலப்பதிகாரம்
(B) அகநானூறு
(C) குறுந்தொகை
(D) புறநானூறு
Ans - (C) குறுந்தொகை
8. கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
(A) பசுவய்யா
(B) க.சச்சிதானந்தன்
(C) சி.சு.செல்லப்பா
(D) ந.பிச்சமூர்த்தி
Ans - (B) க.சச்சிதானந்தன்
9. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
(A) பாரதி
(B) தாரா பாரதி
(C) சுத்தானந்த பாரதி
(D) பாரதிதாசன்
Ans - (D) பாரதிதாசன்
10. “அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை
இப்படிப் புகழ்ந்தவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) கவிமணி
(C) பாரதிதாசன்
(D) வைரமுத்து
Ans - (A) நாமக்கல் கவிஞர்
No comments:
Post a Comment