LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 75

பொது தமிழ் வினா விடை 75

1. நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை
வெளியிட்டது.
(A) 1950
(B) 1975
(C) 1978
(D) 1980
Ans - (C) 1978 

2. நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
(A) பாண்டித்துரையார்
(B) மருது பாண்டியர்
(C) முத்துராமலிங்கனார்
(D) திருமலை நாயக்கர்
Ans - (A) பாண்டித்துரையார்

3. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை
(A) வாக்குரிமை
(B) பேச்சுரிமை
(C) சொத்துரிமை
(D) எழுத்துரிமை
Ans - (C) சொத்துரிமை

4. ‘Instinct’ – என்னும் ஆங்கிலச் சொல்லின் சரியான தமிழ்ச்சொல்
(A) இயற்கை ஓழுங்கு
(B) இயற்கை வனப்பு
(C) இயற்கை அறிவு
(D) இயற்கை கொடை
Ans - (C) இயற்கை அறிவு

5. பொருத்துக : தாவர உறுப்புப் பெயர்கள்
(a) மூங்கில் 1. தாள்
(b) வேப்பம் 2. கூந்தல்
(c) கமுகம் 3. தழை
(d) நெல் 4. இலை
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 2 1 4 3
(C) 3 2 1 4
(D) 4 3 2 1
Ans - (D) 4 3 2 1

6. பொருத்துக :
(a) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் 1. கண்ணதாசன்
(b) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் 2. கவிமணி
(c) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் 3. நாமக்கல் கவிஞர்
(d) சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் 4. பாரதிதாசன்
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1 
 (B) 4 3 1 2
(C) 2 1 4 3
(D) 3 1 2 4
Ans - (B) 4 3 1 2

7. பண்டைத் தமிழர் எருதுவிடும் திருவிழாவை எவ்விதம் அழைத்தனர்?
(A) மஞ்சு விரட்டு
(B)சல்லிக்கட்டு
(C) ஏறு தழுவுதல்
(D) எருதுகட்டு
Ans - (C) ஏறு தழுவுதல்

8. ‘வினையே ஆடவர்க்குயிர்’ எனக் கூறும் நூல்
(A) புறநானூறு
(B) குறுந்தொகை
(C) அகநானூறு
(D) நற்றிணை
Ans - (B) குறுந்தொகை

9. உமர் கய்யாம் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த -------------- கவிஞர்
(A) வங்கத்துக்
(B) சீனத்துக்
(C) பாரசீகக்
(D) ருஷியக்
Ans – (C) பாரசீகக்

10. “அறிவுவுண்டாகுக” என வாழ்த்தியவர் யார்?
(A) மணிமேகலா தெய்வம்
(B) ஆபுத்திரன்
(C) ஆதிரை
(D) அரவண அடிகள்
Ans - (D) அரவண அடிகள்

No comments:

Post a Comment