பொது தமிழ் வினா விடை 76
1. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற மொழியியல்அறிஞர்
(A) கால்டுவெல்
(B) நோம் சாம்சுகி
(C) கபில் சுவலபில்
(D) மாக்சு முல்லர்
Ans - (B) நோம் சாம்சுகி
2. “தமிழரசி குறவஞ்சியை” - இயற்றியவர்
(A) நாமக்கல் கவிஞர்
(B) ஞானியரடிகள்
(C) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
(D) வரத நஞ்சையப்பிள்ளை
Ans - (D) வரத நஞ்சையப்பிள்ளை
3. ‘தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த’ - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள பாடல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) பதிற்றுப்பத்து
(D) சிலப்பதிகாரம்
Ans - (C) பதிற்றுப்பத்து
4. “நீ மீண்டும் தோன்றிய பாரதியடா” என்று கல்யாண சுந்தரத்தை பாராட்டியவர்
(A) மருதகாசி
(B) சுரதா
(C) உடுமலை நாராயண கவி
(D) தோழர் ஜீவானந்தம்
Ans - (D) தோழர் ஜீவானந்தம்
5. தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டப் பெற்றவர் யார்?
(A) திரு.வி.க
(B) மறைமலையடிகள்
(C) பெருஞ்சித்திரனார்
(D) முத்துராமலிங்கர்
Ans - (D) முத்துராமலிங்கர்
6. “தன்னே ரிலாத தமிழ்” இத்தொடர் இடம்பெற்ற நூல்.
(A) திருக்குறள்
(B) தொல்காப்பியம்
(C) தண்டியலங்காரம்
(D) நன்னூல்
Ans - (C) தண்டியலங்காரம்
7. “உலகின் முதல் இரு முறைமைகளைப் பற்றிய உரையாடல்” என்னும் நூல் வெளிவந்த ஆண்டு
(A) 1638
(B) 1642
(C) 1632
(D) 1616
Ans - (C) 1632
8. நெடும்புனலூள் வெல்லும் முதலை அடும்புனரின்
நீங்கின் அதனைப் பிற.
- இதில் பயின்று வரும் அணி
(A) இரட்டுற மொழிதல் அணி
(B) சொற்பொருட் பின்வரு நிலையணி
(C) தற்குறிப்பேற்ற அணி
(D) பிறிது மொழிதல் அணி
Ans - (D) பிறிது மொழிதல் அணி
9. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
(A) பெரியார்
(B) அண்ணா
(C) பாரதியார்
(C) உடுமலை நாராயண கவி
Ans - (C) உடுமலை நாராயண கவி
10. “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்
ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை” - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
(A) அறவுரைக் கோவை
(B) புறநானூறு
(C) நன்னெறி
(D) நற்றிணை
Ans - (A) அறவுரைக் கோவை
No comments:
Post a Comment