LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 81

பொது தமிழ் வினா விடை 81

1. ‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
(A) வண்ணதாசன்
(B) பாரதிதாசன்
(C) கண்ணதாசன்
(D) வாணிதாசன்
ANS: (C) கண்ணதாசன்

2. ‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
(A) ஆண்டுக் குறிப்பு
(B) மாதக்குறிப்பு
(C) நாட் குறிப்பு
(D) வாரக்குறிப்பு
ANS: (C) நாட் குறிப்பு 

3. வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல்
கொடு :
(A) கொடுத்தல்
(B) கொடுத்த
(C) கொடுத்து
(D) கொடுத்தவன்
ANS: (D) கொடுத்தவன்

4. குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
(A) ஓன்று
(B) இரண்டு
(C) ஒன்றரை
(D) அரை
ANS: (D) அரை

5. ‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’
எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
(A) கால்டுவெல்
(B) வீரமாமுனிவர்
(C) ஜி.யு.போப்
(D) சீகன் பால்க் ஐயர்
ANS: (C) ஜி.யு.போப்

6. அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.
(A) தாய்மொழி, தேன், தமிழ், துறை
(B) தமிழ், துறை, தாய்மொழி, தேன்
(C) தமிழ், தாய்மொழி, துறை, தேன்
(D) தேன், துறை, தாய்மொழி, தமிழ்
ANS: (C) தமிழ், தாய்மொழி, துறை, தேன்

7. ‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------
(A) ஜான் பனியன்
(B) லிட்டன் பிரபு
(C) ஜி.யு.போப்
(D) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
ANS: (B) லிட்டன் பிரபு
8. ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
(A) உயர்ந்தோங்கி
(B) நடு மையம்
(C) மீமிசை ஞாயிறு
(D) மாடு மனை
ANS: (D) மாடு மனை
9. பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள் 
(a) துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
(b) தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
(c) கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
(d) சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 2 1 4 3
(C) 4 2 3 1
(D) 3 4 2 1
ANS: (B) 2 1 4 3
10. “நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?
(A) மறைமலையடிகளார்
(B) திரு.வி.கலியணசுந்தரனார்
(C) தஞ்சை வேதநாயக சாத்திரியார்
(D) பெருஞ்சித்திரனார்
ANS: (B) திரு.வி.கலியணசுந்தரனார்

No comments:

Post a Comment