பொது தமிழ் வினா விடை 82
1. “அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத்
தேர்க.
(A)அன்பு – குழந்தை, அருள் - தாய், பொருள் - வளர்ப்புத்தாய்
(B)அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
(C) அன்பு – வளர்ப்புத்தாய், அருள் - குழந்தை, பொருள் - தாய்
(D) அன்பு – தாய், அருள் - வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
ANS: (B) அன்பு – தாய், அருள் - குழந்தை, பொருள் - வளர்ப்புத்தாய்
2. “தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’
அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.
(A) அண்ணாதுரை
(B) இராஜாஜி
(C) பக்தவச்சலம்
(D) காமராசர்
ANS: (D) காமராசர்
3. பொருந்தாச் சொல்லைக் காண்க.
(A) சுத்துருகினன்
(B) பரதன்
(C) நகுலன்
(D) சுக்ரீவன்
ANS: (C) நகுலன்
4. “வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்”
மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?
(A) நிடத நாடு
(B) கோசல நாடு
(C) சோழ நாடு
(D) ஏமாங்கத நாடு
(A) ANS: (B) கோசல நாடு
5. “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
-------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.
(A) மதுரைக்காஞ்சி
(B) பட்டினப்பாலை
(C) நெடுநல்வாடை
(D) மலைபடுகடாம்
ANS: (B) பட்டினப்பாலை
6. இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.
(A) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
(B) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
(C) வன்றொடர்க் குற்றியலுகரம்
(D) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
ANS: (D) நெடில் தொடர்க் குற்றியலுகரம்
7. ‘புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்?
(A) ஞான கூத்தன்
(B) சாலை இளந்திரையன்
(C) சாலினி இளந்திரையன்
(D) சி.சு.செல்லப்பா
ANS: (B) சாலை இளந்திரையன்
8. பின்வரும் நூலகளுள் ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?
(A) இயேசு காவியம்
(B) திருக்கை வழக்கம்
(C) தைப்பாவை
(D) கல்லக்குடி
ANS: (B) திருக்கை வழக்கம்
9. பொருத்துக :
(a) சிங்கம் 1. அகவும்
(b) மயில் 2. கனைக்கும்
(c) புலி 3. முழங்கும்
(d) குதிரை 4. உறுமும்
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 3 2 1 4
(D) 3 1 4 2
ANS: (D) 3 1 4 2
10. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
‘கரிசலாங்கண்ணியின்’ வேறுபெயர்
(A) தேகராசம்
(B) ஞானப்பச்சிலை
(C) பிருங்கராசம்
(D) கையாந்தகரை
ANS: (B) ஞானப்பச்சிலை
No comments:
Post a Comment