பொது தமிழ் வினா விடை 83
1. மாறியுள்ள சொற்களில் முறையானதை எழுதுக.(A) பொன்செய்யும் மருந்து மனமே என்ற போதும்
(B) போதும் என்ற மருந்து பொன் செய்யும் மனமே
(C) மனமே என்ற மருந்து பொன் செய்யும் போது
(D) போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
ANS: (D) போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
2. ------------------------ எழுத்துகள் மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
(A) ல், ள்
(B) த், ந்
(C) ர், ழ்
(D) ற், ன்
ANS: (C) ர், ழ்
3. பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு
(A) தே - சோலை
(B) வீ - கடவுள்
(C) வை - வைக்கோல்
(D) கா - மலர்
ANS: (C) வை - வைக்கோல்
4. இலக்கணக் குறிப்பு அறிதல்
(A) வெந்து, உலர்ந்து – வினையெச்சங்கள் மேலும் மென்தொடர் குற்றியலுகரங்கள்
(சு) முற்று பெறாத வினைச்சொல் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம், குற்றியலுகரச்
சொல்லில் ஈற்றயல் எழுத்து, மெல்லினமெய்யாய் அமைவது மென்தொடர் குற்றியலுகரம்.
(A) சரி, (சு) தவறு
(B) சரி, (சு) - (A) க்கு சரியான விளக்க மன்று
(C) தவறு (சு) சரி
(D) மற்றும் (சு) இரண்டும் சரி மேலும் (A)க்கு (சு) சரியான விளக்கமாகும்.
ANS: (D) மற்றும் (சு) இரண்டும் சரி மேலும் (A)க்கு (சு) சரியான விளக்கமாகும்.
5. பொருத்துக :
(a) இயல்பு புணர்ச்சி 1. மொழிப்பொருள்
(b) தோன்றல் விகாரம் 2. கற்சிலை
(c) கெடுதல் விகாரம் 3. மரவேர்
(d) திரிதல் விகாரம் 4. வான் மழை
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 4 1 3 2
(C) 4 1 2 3
(D) 2 3 4 1
ANS: (B) 4 1 3 2
6. பிழையான சீர் - அசை எது?
(A) ஆதல் - நேர் நேர்
(B) ஆகுல – நேர் நிரை
(C) நீர – நேர் நேர்
(D) பிற – நேர் நேர்
ANS: (D) பிற – நேர் நேர்
7. பாஞ்சாலி சபத்தத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
(A) மூன்று பாகங்கள் 4 சருக்கங்கள் 400 பாடல்கள்
(B) இரண்டு பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாக்கள்
(C) இரண்டு பாகங்கள் 7 சருக்கங்கள் 450 பாக்கள்
(D) நான்கு பாகங்கள் 5 சருக்கங்கள் 415 பாக்கள்
ANS: (B) இரண்டு பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாக்கள்
8. ‘பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்’ – என்ற பாடலை இயற்றியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ANS: (C) சுரதா
9. வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை
ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனம் சொல்வேன்! – எவ்வகை வாக்கியம்
(A) வினா வாக்கியம்
(B) செய்தி வாக்கியம்
(C) வியப்பு வாக்கியம்
(D) கட்டளை வாக்கியம்
ANS: (C) வியப்பு வாக்கியம்
10. ஐஞ்சிறுங் காப்பியங்கள் அனைத்துமே ----------------- சமயக் காப்பியம்.
(A) பௌத்தம்
(B) சமணம்
(C) வைணவம்
(D) சைவம்
ANS: (B) சமணம்
No comments:
Post a Comment