பொது தமிழ் வினா விடை 84
1. பின்வருவனவற்றுள், ‘இருபெயரொட்டுப் பண்புத் தொகை’ சொல் எது?(A) கபிலபரணர்
(B) கயல்விழி
(C) மல்லிகை பூ
(D) வெண்ணிலவு
ANS: (C) மல்லிகை பூ
2. ‘தலை வணங்கினான்’ என்பது பின்வருவனவற்றுள் எது?
(A) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
(B) மூன்றாம் வேற்றுமைத் தொகை
(C) நான்காம் வேற்றுமைத்தொகை
(D) ஆறாம் வேற்றுமைத் தொகை
ANS: (B) மூன்றாம் வேற்றுமைத் தொகை
3. வாணிதாசனால் எழுதப்பட்ட ‘பாடல் தொகுப்பின்’ பெயரைக்கூறுக.
(A) இளைஞர் இலக்கியம்
(B) பூங்கொடி
(C) குடும்ப விளக்கு
(D) குழந்தை இலக்கியம்
ANS: (D) குழந்தை இலக்கியம்
4. பொருளறிந்து பொருத்துக.
சொல் பொருள்
(a) வைதருப்பம் 1. சித்திரகவி
(b) கௌடம் 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம் 3. வித்தாரகவி
(d) மாகதம் 4. மதுரகவி
(a) (b) (c) (d)
(A) 2 4 3 1
(B) 4 2 3 2
(C) 1 3 2 4
(D) 2 4 1 3
ANS: (D) 2 4 1 3
5. குன்றக்குடி அழகளாரால் ‘கவியரசு’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
(A) வைரமுத்து
(B) கண்ணதாசன்
(C) வாணிதாசன்
(D) முடியரசன்
ANS: (D) முடியரசன்
6. பிரித்தெழுதுக.
தென்றிசை
(A) தென் + றிசை
(B) தென் + திசை
(C) தெற்கு + றிசை
(D) தெற்கு + திசை
ANS: (D) தெற்கு + திசை
7. ‘நட’ என்பதன் வினைமுற்று
(A) நடத்திய
(B) நடந்து
(C) நடத்தல்
(D) நடந்தான்
ANS: (D) நடந்தான்
8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) நான் வாங்கிய நூல் இது அல்ல
(B) நான் வாங்கிய நூல்கள் இது அன்று
(C) நான் வாங்கிய நூல் இது அன்று
(D) நான் வாங்கிய நூல் இவை அல்ல
ANS: (C) நான் வாங்கிய நூல் இது அன்று
9. குலசேகர ஆழ்வார் வட மொழியில் எழுதிய நூல் எது?
(A) முகுந்தமாலை
(B) முதலாயிரம்
(C) திருவியற்பா
(D) பெரிய திருமொழி
ANS: (A) முகுந்தமாலை
10. ‘பெரிய புராணம்’ எழுதிடத் துணை நின்ற நூல் எது?
(A) திருத்தொண்டத் தொகை
(B) திருவாசகம்
(C) தேவாரம்
(D) திருவெம்பாவை
ANS: (A) திருத்தொண்டத் தொகை
No comments:
Post a Comment