பொது தமிழ் வினா விடை 85
1. பிறவினை வாக்கியத்திற்குப் பொருந்தாததைக் கண்டறிக.(A) ஆசிரியர் வகுப்பறையில் வரைபடத்தைக் காண்பித்தார்
(B) கோவையிலிருந்து என் தாயாரைச் சென்னைக்கு வருவித்தேன்
(C) நேற்று என் நண்பனுக்குப் பாடம் கற்பித்தேன்
(D) நான் உன்னைவிட செல்வாக்குள்ளவன் அல்லன்
ANS: (D) நான் உன்னைவிட செல்வாக்குள்ளவன் அல்லன்
2. “அன்புள இனிநாம ஓர் ஐவர்கள் உளரானோம்”
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?
(A) சீவக சிந்தாமணி
(B) சிலப்பதிகாரம்
(C) பாஞ்சாலி சபதம்
(D) கம்பராமாயணம்
ANS: (D) கம்பராமாயணம்
3. “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” - இவ்வடி இடம் பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
(A) துமிழரசி குறவஞ்சி
(B) குற்றாலக் குறவஞ்சி
(C) பேத்தலகேம் குறவஞ்சி
(D) சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
ANS: (B) குற்றாலக் குறவஞ்சி
4. பொருளறிந்து பொருத்துக.
(a) EVOKE 1. வெளிப்படு
(b) EVOLVE 2. அகற்று
(c) EVINCE 3. அழை
(d) EVICT 4. நுருபி
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 3 1 4 2
(C) 2 4 3 1
(D) 2 3 4 1
ANS: (B) 3 1 4 2
5. “நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம்” என்றவர்
(A) பெரியார்
(B) அறிஞர் அண்ணா
(C) அண்ணல் அம்பேத்கர்
(D) காந்தியடிகள்
ANS: (D) காந்தியடிகள்
6. பொருந்தாததைக் கண்டெழுதுக
(A) இராணி மங்கம்மாள் கணவன் - சொக்கநாத நாயக்கர்
(B) இராணி மங்கம்மாள் மகன் - முத்து வீரப்பன்
(C) இராணி மங்கம்மாள் மருமகள் - கமலாம்பிகை
(D) இராணி மங்கம்மாள் பெயரன் - விஜயரங்கச் சொக்கநாதன்
ANS: (C) இராணி மங்கம்மாள் மருமகள் - கமலாம்பிகை
7. “ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்”
என்றவர் யார்?
(A) அன்னிபெசண்ட் அம்மையார்
(B) மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்
(C) தில்லையாடி வள்ளியம்மை
(D) இராணி மங்கம்மாள்
ANS: (D) இராணி மங்கம்மாள்
8. பொருந்தாத சொல்லைக் கண்டறிக :
கடலைக் குறிக்காத தமிழ்ச்சொல்
(A) பௌவம்
(B) பரவை
(C) புணரி
(D) திமில்
ANS: (D) திமில்
9. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
மாட்சி
(A) பொருட்பெயர்
(B) இடப்பெயர்
(C) பண்புப்பெயர்
(D) காலப்பெயர்
ANS: (C) பண்புப்பெயர்
10. கோடிட்ட இடத்தை நிரப்புக
யவனர் என்று அழைக்கப்பட்டவர் --------------, -----------------------
(A) உரேமானியர், எகிப்தியர்
(B) கிரேக்கர், உரோமானியர்
(C) கிரேக்கர், சீனர்
(D) சீனர், எகிப்தியர்
ANS: (B) கிரேக்கர், உரோமானியர்
No comments:
Post a Comment