LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 87

பொது தமிழ் வினா விடை 87

1. ஆய்தமாகிய சார்பெழுத்து ----------------------- இடமாகக் கொண்டு பிறக்கிறது.
(A) கழுத்தை
(B) மார்பை
(C) தலையை
(D) மூக்கை
ANS: (C) தலையை
2. விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ் ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
(A) துன்பத்தின் நிலைபாடு என்ன?
(B) எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?
(C) அரிது என்பதன் பொருள் கூறுக
(D) இயல்புடையாருக்கு இன்னல் வருமா?
ANS: (B) எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?
3. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) ஆவாரம், ஆதாரம், ஆசாரம், ஆகாரம்
(B) ஆகாரம், ஆதாரம், ஆவாரம், ஆசாரம்
(C) ஆசாரம், ஆவாரம், ஆதாரம், ஆகாரம்
(D) ஆகாரம், ஆசாரம், ஆதாரம், ஆவாரம்
ANS: (D) ஆகாரம், ஆசாரம், ஆதாரம், ஆவாரம்
4. “கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம்
இங்குக் கண்டேன்” இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மகாபாரதம்
(C) நளவெண்பா
(D) கம்பராமாயணம்
ANS: (D) கம்பராமாயணம் 
5. இணையதள பயன்பாடு அதிகரித்தது அதனால் உலகம் குறுகியது.
- எவ்வகைத் தொடர்?
(A) கலவைத் தொடர்
(B) உணர்ச்சித் தொடர்
(C) தனிநிலைத் தொடர்
(D) தொடர் நிலைத் தொடர்
ANS: (D) தொடர் நிலைத் தொடர்
6. “அழகர் கோவிலில் தந்தச் சிற்பங்கள் இல்லாமல் இல்லை” – எவ்வகைத் தொடர்.
(A) அயற்கூற்றுத் தொடர்
(B) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
(C) பிறவினைத் தொடர்
(D) செய்வினைத் தொடர்
ANS: (B) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
7. பொருத்துக :
அஃறிணை உயிர்கள் ஒலிமரபு
(a) பூனை 1. குனுகும்
(b) புறா 2. முரலும்
(c) குரங்கு 3. சீறும்
(d) வண்டு 4. அலப்பும்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 4 2 1 3
(C) 3 1 4 2
(D) 3 4 1 2
ANS: (C) 3 1 4 2
8. பின்வருவனவற்றுள் பிறமொழிக்கலவாத தமிழ்ச் சொல்லைத் தேர்க.
(A) குமாரன்
(B) அயலார்
(C) உத்தரவு
(D) கிராமம்
ANS: (B) அயலார்
9. சொற்களின் வகைகளைப் பொருத்திடுக :
(a) காற்று, பலகை 1. பெயர்த் திரிசொற்கள்
(b) எயிறு, நல்குரவு 2. வடசொற்கள்
(c) கமலம், புஷ்பம் 3. பெயர் இயற்சொற்கள்
(d) கேணி, பெற்றம் 4. திசைச் சொற்கள் 
(a) (b) (c) (d)
(A) 3 2 1 4
(B) 1 3 4 2
(C) 3 1 2 4
(D) 1 4 2 3
ANS: (C) 3 1 2 4
10. பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?
(A) விருத்தமும் சிந்துவும்
(B) விருத்தமும் ஆசிரியமும்
(C) ஆசிரியமும் வெண்பாவும்
(D) வெண்பாவும் சிந்துவும்
ANS: (A) விருத்தமும் சிந்துவும்

No comments:

Post a Comment