பொது தமிழ் வினா விடை 88
1. உரிய விடையைத் தேர்வு செய்க.சுhலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்றக் காரணமானவர்?
(A) உலகத் தமிழ்ப பண்பாட்டு இயக்கம்
(B) தமிழ் முன்னெற்ற இயக்கம்
(C) உலகப் பண்பாடடு இயக்கம்
(D) உலக ஒருமைப்பாட்டு இயக்கம்
ANS: (A) உலகத் தமிழ்ப பண்பாட்டு இயக்கம்
2. வளரும் பிள்ளைகட்கு வள்ளலார் வழங்கிய அறிவுரையைக் காண்க.
I. குருவை வணங்கக் கூசி நிற்காதே
II. மூடக்கருத்துக்களை நம்பாதே
III. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
IV. சமுதாயத்திற்குத் தீங்குச் செய்யாதே
(A) I -ம் III -ம் சரியானவை
(B) II -ம் III -ம் சரியானவை
(C) I, II, III மூன்றும் சரியானவை
(D) I -ம் IV -ம் சரியானவை
ANS: (A) I -ம் III -ம் சரியானவை
3. ‘உவமைக் கவிஞர்’ சுரதாவின் இயற்பெயர் என்ன?
(A) சந்திரசேகர்
(B) முத்தையா
(C) பாலசுப்பிரமணி
(D) இராசகோபாலன்
ANS: (D) இராசகோபாலன்
4. திராவிட மொழிகளின் உயிர் நீட்சி ஒலியின் தன்மைய தாகும்.
- இத்தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
(A) கட்டளை வாக்கியம்
(B) செய்தி வாக்கியம்
(C) வினா வாக்கியம்
(D) வியப்பு வாக்கியம்
ANS: (B) செய்தி வாக்கியம்
5. “பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல்” - இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
(A) தேன் மழை
(B) குயில் பாட்டு
(C) கோடி முல்லை
(D) மாங்கனி
ANS: (B) குயில் பாட்டு
6. கோடிட்ட சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளின் மாத்திரை -------------------------
(A) 5 1/2 மாத்திரைகள்
(B) 2 1/2 மாத்திரைகள்
(C) 4 3/4 மாத்திரைகள்
(D) 2 1/4 மாத்திரைகள்
ANS: (D) 2 1/4 மாத்திரைகள்
7. “உலகெலாம்” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?
(A) திருவிளையாடற் புராணம்
(B) திருவாசகம்
(C) திருத்தொண்டர் புராணம்
(D) திருமந்திரம்
ANS: (C) திருத்தொண்டர் புராணம்
8. “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று இறைவன் யாரிடம் கூறினார்?
(A) சுந்தரர்
(B) அப்பர்
(C) மாணிக்கவாசகர்
(D) ஆண்டாள்
ANS: (C) மாணிக்கவாசகர்
9. மங்கம்மாள் அன்னச்சத்திரம் கட்டிய இடம் எது?
(A) சென்னை
(B) மதுரை
(C) கோவை
(D) தஞ்சை
ANS: (B) மதுரை
10. பொருந்தாத சொல்லைத் தேர்க.
(A) அம்பி
(B) பரவை
(C) வாரணம்
(D) கடல்
ANS: (A) அம்பி
No comments:
Post a Comment