LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 89

பொது தமிழ் வினா விடை 89

1. ‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்
(A) எதிர்மறைத் தொடர்
(B) பிறவினைத் தொடர்
(C) செய்வினைத் தொடர்
(D) தன்வினைத் தொடர்
ANS: (C) செய்வினைத் தொடர்
2. ‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?
(A) குறிஞ்சி
(B) மருதம்
(C) நெய்தல்
(D) முல்லை
ANS: (A) குறிஞ்சி
3. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?
(A) இல்பொருள் உவமை அணி
(B) உருவக அணி
(C) வேற்றுமை அணி
(D) பிறிது மொழிதல் அணி
ANS: (A) இல்பொருள் உவமை அணி
4. கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
(A) பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
(B) ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
(C) மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
(D) திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
ANS: (C) மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
5. கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை
(A) வெண்தயிர்
(B) சேவடி
(C) செந்நெல்
(D) சுடரொளி
ANS: (D) சுடரொளி
6. ‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி
(A) இனிய சொல்
(B) இனிமையற்ற சொல்
(C) இழிவான சொல்
(D) விரிவான சொல்
ANS: (A) இனிய சொல்
7. வழூஉச் சொல்லற்ற தொடர் எது? 
(A) கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
(B) கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
(C) கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
(D) கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
ANS: (C) கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
8. செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது
(A) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
(B) அளைமறி பாப்புப் பொருள்கோள்
(C) மொழி மாற்றுப் பொருள்கோள்
(D) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
ANS: (D) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
9. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(A) கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
(B) நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.
(C) கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
(D) மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.
ANS: (C) கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
10. வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது
(A) உள்ளுறை
(B) உருவகம்
(C) உவமை
(D) வெளிப்படை
ANS: (A) உள்ளுறை

No comments:

Post a Comment