LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 90

பொது தமிழ் வினா விடை 90

1. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.
(A) தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
(B) சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்
(C) தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
(D) இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
ANS: (A) தமிழர்கள் அரபு நாட்டுடனும், யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
2. “தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்
(A) குமரகுருபரர்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) சேக்கிழார்
(D) பாரதிதாசன்
ANS: (B) சீத்தலைச் சாத்தனார்

3. சேக்கிழாரின் இயற்பெயர் 
(A) மீனாட்சி சுந்தரனார்
(B) ஆனந்தரங்கம் பிள்ளை
(C) அருண் மொழித்தேவர்
(D) வாகீசர்
ANS: (C) அருண் மொழித்தேவர்

14. குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை
(A) மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை (B) ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
(C) நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை (D) இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
ANS: (C) நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை

5. “சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது :
சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்
(A) மு.மேத்தா
(B) சாலை.இளந்திரையன்
(C) அப்துல் ரகுமான்
(D) ந.பிச்சமூர்த்தி
ANS: (B) சாலை.இளந்திரையன்

6. கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.
(A) ஞாயிறு
(B) பகலவன்
(C) பிரமன்
(D) ஆதவன்
ANS: (C) பிரமன்

7. திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக
(A) ஆதி காவியம்
(B) பொய்யாமொழி
(C) உத்தர வேதம்
(D) தமிழ்மறை
ANS: (A) ஆதி காவியம்

8. பொருத்துக :
(a) அடவி 1. மான்
(b) நவ்வி 2. சிலுவை
(c) விசும்பு 3. காடு
(d) குருசு 4. வானம்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 3 1 4 2
(C) 3 4 2 1
(D) 2 3 1 4 
ANS: (B) 3 1 4 2

9. ‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’
என்பது உன் நெறியாக இருக்கட்டும். - இக்கடித வரிகள் யாருடையது?
(A) நேரு
(B) காந்தி
(C) மு.வ.
(D) அண்ணா
ANS: (C) மு.வ.

10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
(A) காலதர்
(B) சாளரம்
(C) சன்னல்
(D) கொட்டில்கள்
ANS: (D) கொட்டில்கள்

No comments:

Post a Comment