LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 91

பொது தமிழ் வினா விடை 91

1. உரிய சொல்லால் நிரப்புக :
செய்க பொருளைச் ------------------ செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்
(A) செய்யார்
(B) செய்வார்
(C) சென்று
(D) செறுநர்
ANS: (D) செறுநர்

2. இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
(A) நற்றிணை
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) பரிபாடல்
ANS: (D) பரிபாடல்

3. “நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது
(A) இமயமலை
(B) திருவேங்கடமலை
(C) கொல்லி மலை
(D) அழகர் மலை
ANS: (B) திருவேங்கடமலை

4. “உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” - இப்பாடல் இடம்பெறும் நூல்
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) நற்றிணை
(D) திருக்குறள்
ANS: (B) புறநானூறு
5. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” - இதனைக் கூறியவர் 
 (A) சீத்தலைச் சாத்தனார்
(B) புகழேந்திப் புலவர்
(C) இளங்கோவடிகள்
(D) இராமலிங்க அடிகள்
ANS: (C) இளங்கோவடிகள்
6. ‘சிங்கவல்லி’ என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?
(A) குப்பை மேனி
(B) துளசி
(C) கரிசலாங்கண்ணி
(D) தூதுவளை
ANS: (D) தூதுவளை

7. “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்”
இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்.
(A) மலர்
(B) மகரந்தம்
(C) குளம்
(D) சோலை
ANS: (B) மகரந்தம்

8. அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே
- இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) காலை
(B) மாலை
(C) இரவு
(D) பகல்
ANS: (D) பகல்

9. “பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ;;;; அதுவே நம்மொழி” என்பார்
(A) பாரதியார்
(B) தேவநேயப் பாவாணர்
(C) பரணர்
(D) மறைமலையடிகள்
ANS: (B) தேவநேயப் பாவாணர்

10. கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?
(A) கீழ்வாய்நெல்லி
(B) குமரி
(C) பிருங்கராசம்
(D) ஞானப் பச்சிலை
ANS: (C) பிருங்கராசம்

No comments:

Post a Comment