LATEST

Saturday, April 18, 2020

பொது தமிழ் வினா விடை 92

பொது தமிழ் வினா விடை 92

1. ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?
(A) ஓட்டக்கூத்தர்
(B) பரணர்
(C) குமரகுருபரர்
(D) பிசிராந்தையார்
ANS: (A) ஓட்டக்கூத்தர்
2. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது? 
(A) கீழார் வெளி
(B) ஆதிச்சநல்லூர்
(C) மதுரை
(D) திருவண்ணாமலை
ANS: (B) ஆதிச்சநல்லூர்

3. ‘எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்’
- சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?
(A) நச்சினார்க்கினியர்
(B) நல்லியக்கோடன்
(C) கரிகாலன்
(D) நக்கீரர்
ANS: (B) ஆதிச்சநல்லூர்
4. நீலமணி மிடற்(று) ஒருவன் போல
மன்னுக பெரும நீயே - இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?
(A) குமணன்
(B) கோப்பெருஞ் சோழன்
(C) சோழன் கரிகாற்பெருவளத்தான்
(D) அதியமான் நெடுமான் அஞ்சி
ANS: (D) அதியமான் நெடுமான் அஞ்சி
5. பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு
(A) 14 – 19
(B) 12 – 13
(C) 20 – 25
(D) 13 – 14
ANS: (B) 12 – 13

6 கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
(A) 92 படலங்கள், 5027 பாடல்கள்
(B) 12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
(C) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்
(D) 10 சருக்கங்கள், 894 பாடல்கள்
ANS: (C) 5 சருக்கங்கள், 412 பாடல்கள்

7. கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
(a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
(c) காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக்காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது 4. அகநானூறு
போல் நாவாய் அசைந்தது.
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1 
(B) 3 4 2 1
(C) 1 2 4 3
(D) 3 4 1 2
ANS: (D) 3 4 1 2

8. ‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?
(A) குலசேகர ஆழ்வார்
(B) ஆண்டாள்
(C) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(D) பெரியாழ்வார்
ANS: (C) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

9. “சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள்
அப்பெண்
“இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார், அப்பெண் யார்?
(A) வேலு நாச்சியார்
(B) அஞ்சலையம்மாள்
(C) தில்லையாடி வள்ளியம்மை
(D) அம்புஜத்தம்மாள்
ANS: (C) தில்லையாடி வள்ளியம்மை

10. உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) அழுகுனிச் சித்தர்
(D) கடுவெளிச் சித்தர்
ANS: (D) கடுவெளிச் சித்தர்

No comments:

Post a Comment