LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 13

இந்திய வரலாறு வினா விடை பகுதி 13

1. கீழ்கண்டவற்றை பொருத்துக
(A) சாகுந்தலம் 1. விசாகதத்தர்
(B) முத்ராராட்சசம் 2. தண்டின்
(C) மிருச்சகடிகம் 3. காளிதாசர்
(D) தசகுமாரசரிதம் 4. சூத்ரகர்
a b c d
(A) 1 3 2 4
(B) 3 1 4 2 
(C) 4 3 1 2
(D) 2 4 3 1

2. 1908ம் ஆண்ட பாரதியார் சென்னையில் மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கூட்டி ___________ கொண்டாடினார்.
(A) சுயராஜ்ஜய நாள்
(B) பிறந்த நாள்
(C) பத்திரிக்கை நாள்
(D) சேவை நாள்

3. பூதான் இயக்கத்தை ஆரம்பித்தவர்
(A) ஜெயபிரகாஷ் நாராயணன்
(B) ஜவஹர்லால் நேரு
(C) ஆச்சாரிய வினோபா பாவே
(D) டாக்டர்.ராஜேந்திர பிரசாத்

4. தாஷ்கண்ட் ஒப்பந்தம் கீழ்கண்ட எந்த நிகழ்வுடன் சம்மந்தப்பட்டது?
(A) இந்தியா-பாகிஸ்தான் போர் (1965)
(B) இந்தியா-பாகிஸ்தான் போர் (2000)
(C) வங்க சுதந்திரப்போர் (1971)
(D) சீனப்படையெடுப்பு (1962)

5. அகிம்சை மற்றும் சத்தியம் போன்ற கொள்கைகளை காந்திக்கு விதைத்தவர் யார்?
(A) கோகலே
(B) திலகர்
(C) லாலா லஜபதி ராய்
(D) ராஜ்சந்திர ரவிஜிபாய்

6. பொருத்துக:
(A) சங்கம வம்சம் 1. வீரநரசிம்மர்
(B) சாளுவ வம்சம் 2. ஹரிஹரர்
(C) துளுவ வம்சம் 3. சாளுவ நரசிம்மர்
(D) அரவீடு வம்சம் 4. திருமலா
a b c d
(A) 4 2 1 3
(B) 2 3 1 4
(C) 3 2 1 4
(D) 2 4 1 3

7. கீழ்கண்டவற்றுள் எதுஃஎவை தவறானவை? 
(i) வஜ்ஜிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்
(ii) அச்சுத விக்ரந்தா காஞ்சியை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்
(iii) சோழர்களின் காலம் “மகா சபையின் பொற்காலமாக” கருதப்படுகிறது
(iV) பல்லவர்களின் ஆட்சி மொழி சமஸ்கிருதம்
(A) (ii) மட்டும் தவறு
(B) (i) மற்றும் (ii) சரியானது
(C) (ii) மற்றும் (iv) தவறானது
(D) (i), (iii) மற்றும் (iV) தவறானது

8. வேத காலத்தில் கீழ்க்கண்ட எந்த பிரிவு தட்சிணபாதம் என அழைக்கப்பட்டது?
(A) வட இந்தியா
(B) மத்திய இந்தியா
(C) தென்னிந்தியா
(D) இந்தியாவுக்க அப்பால்

9. தவறான வாக்கியத்தை கண்டுபிடி
(A) மன்சப்தாரி முறை அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது
(B) அக்பர் பதேபூர் சிக்கிரியில புலந்தர்வாசா கட்டிடத்தை கட்டினார்
(C) அக்பரின் முன்னோடி ஷெர்ஷா
(D) அக்பர் சலீம் என்றழைக்கப்பட்டார்

10. இந்தியாவில் நீர்பாசனத்திற்கு வரி செலுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்
(A) பிரோஸ் துக்ளக்
(B) முகமது பின் துக்ளக்
(C) அலாவுதின் கில்ஜி
(D) இல்துமிஷ்

No comments:

Post a Comment