LATEST

Sunday, May 17, 2020

இந்திய வரலாறு வினா விடை பகுதி 9

இந்திய வரலாறு வினா விடை பகுதி 9

1. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனித்து கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க:
கூற்று (A): மத்திய இந்தியா மற்றும் இராஜஸ்தானில் வாழும் ராஜபுத்திரர்கள் மற்றும் ஜாட்டுகள் பொதுவாக பெண் குழந்தைகளை கொல்லுவது வழக்கம். திருமண நேரத்தில் வரதட்சணையிலிருந்து தப்பிக்க பெண் குழந்தைகளை கங்கையில் வீசினார்கள்
காரணம் (R) : பெண் குழந்தையை கொல்லுவது கொலைக்குச் சமம், கொலைக்கு காரணமானவர்களை குற்றத் தண்டனை மூலம் தண்டிக்கப்படுவார்கள் என வில்லியம் பென்டிங்க் அறிவித்தார்.
(A) (A) மற்றும் (R) உண்மை, (R), (A) க்கு சரியான விளக்கமாகும்
(B) (A) மற்றும் (R) உண்மை ஆனால், (R), (A) க்கு சரியான விளக்கம் இல்லை.
(C) (A) உண்மையானது, ஆனால் (R) பொய்யானது
(D) (A) தவறானது ஆனால் (R) உண்மையானது

2. எப்பொழுது ‘மெட்ராஸ் இந்து சமுதாய சீர்திருத்த இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டது?
(A) 1890
(B) 1891
(C) 1892
(D) 1893

3. கீழ்க்கண்டவற்றுள், எந்த ஒன்று இராமகிருஷ்ண மிஷனின் செய்திகளில் குறிப்பிட்டவை
அல்ல?
(A) கடவுள் பக்தி
(B) ஆன்மிக வளர்ச்சி
(C) அனைத்து மதங்களின் ஒற்றுமை
(D) மனிதர்களுக்கான சேவைகள்

4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
(A) ஆத்மிய சபா - ராதாகண்ட தேவ்
(B) தர்ம சபா - தேவேந்திரநாத் தாகூர்
(C) தத்துவபோதினி சபா - ராம்மோகன் ராய்
(D) பிராத்தன சமாஜம் - டாக்டர்.ஆத்மராம் பாண்டுரங்

5. பட்டியல் I லிருந்து பட்டியல் II ஐ பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
(a) குதுப்மினார் 1. வங்காள பாணி கொண்ட முதல் சிறந்த நினைவுச்சின்னம்
(b) லோட்டன் மசூதி 2. வெற்றி கோபுரம்
(c) குவாத்-உல்-இஸ்லாம் 3. இஸ்லாமிய கட்டிடக் கலையின் பொக்கிச ரத்தினம்
(d) அலைதர்வாசா 4. இஸ்லாமின் பலம்
a b c d
(A) 4 3 2 1
(B) 2 1 3 4
(C) 2 1 4 3
(D) 1 2 4 3

6. கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ஒரு நிலம் சார்ந்த கடவுளைக் குறிப்பிடுக
(A) சாவித்திரி
(B) சோமா
(C) இந்திரன்
(D) அஸ்வினிகள்

7. கொரில்லா போர் முறை என்றால் 
(A) முறையான போர் முறை
(B) பயிற்சி பெற்ற போர் முறை
(C) முறைசாரா போர் முறை
(D) கலப்பு போர் முறை

8. ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
(A) சாம வேதம்
(B) தனுர் வேதம்
(C) அதர்வ வேதம்
(D) வருண வேதம்

9. கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
(a) பானிபட் 1. கி.பி.1527
(b) காக்ரா 2. கி.பி.1528
(C) கான்வா 3. கி.பி.1529
(d) சந்தேரி 4. கி.பி.1526
a b c d
(A) 1 2 4 3
(B) 4 3 1 2
(C) 3 4 2 1
(D) 2 1 3 4

10. எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?
(A) எட்டுத்தொகை
(B) பத்துப்பாட்டு
(C) தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்
(D) சிலப்பதிகாரம்

No comments:

Post a Comment