LATEST

Friday, December 30, 2022

December 30, 2022

Central Reserve Police Force Notification 2022

 Central Reserve Police Force Notification 2022



The Central Reserve Police Force (CRPF) has published the CRPF ASI Steno Recruitment 2022 notification for recruiting 12th pass candidates as Assistant Sub Inspector (ASI) Stenographer. These posts are for regular appointment in the CRPF and candidates will be selected through written exam, physical test, skill test.


Vacancy Details

Assistant Sub Inspector (ASI) Steno:     143


Age Limit

For ASI Steno post in CRPF, Candidate must be in the age group of 18-25 years as on 25.01.2023.

Relaxation details for various reserved categories are provided below –

SC/ST: 5 years

OBC: 3 years

Ex-servicemen: 3 years after deduction of the military service rendered from the actual age as on the closing date.

Central Government Servants: who have rendered not less than 3 years regular/ continuous service as on closing date are eligible upto the age of 40 years for General/EWS candidates, 43 years for OBC candidates and upto 45 years in the case of candidates belonging to SC/ST.

Children and dependent of victims killed in the 1984 riots or communal riots of 2002 in Gujarat (Un-reserved): 5 Years

Children and dependent of victims killed in the 1984 riots or communal riots of 2002 in Gujarat (OBC): 8 Years

Children and dependent of victims killed in the 1984 riots or communal riots of 2002 in Gujarat (SC/ST): 10 Years.


Selection Process:

The recruitment process for ASI (Steno) post in Central Reserve Police Force (CRPF) will consist of CBT/Skill Test/PST & DV and medical examination (DME/RME).


Application Fees:

Examination Fees for CRPF ASI (Steno) is ₹ 100/- for male candidates of General, EWS and OBC only.

Candidates belonging to SC/ ST, Ex-servicemen and Female candidates of all categories are exempted.


Important Dates

Date of Notification:    27.12.2022

Starting Date of Online Application:    04.01.2023

Last Date of Online Application:    25.01.2023


Notification Link: Click Here

Apply Link: Click Here


December 30, 2022

PMGKAY மற்றும் NFSA திட்ட இணைப்பு

 PMGKAY மற்றும் NFSA திட்ட இணைப்பு



  • மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனாவை (PMGKAY) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் (NFSA) இணைக்க முடிவு செய்துள்ளது.
  • நாடு தழுவிய முழு ஊரடங்கு மூலம் வாழ்வாதாரம் முடங்கிய ஏழைகளுக்கு உதவிட PMGKAY திட்டம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் 80 கோடி ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது.
  • NFSA சட்டத்தின் கீழ், ஒவ்வொரு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பமும், மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு.
  • மற்ற அனைத்து வகை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும்.


December 30, 2022

துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் 2022

துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் 2022

 

எப்பொழுது: டிசம்பர் 2022

எங்கு:மதுரை

யாரால்:மு.க.ஸ்டாலின்

குறிப்புகள்:
  • தமிழக அரசானது, துப்புரவுப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடங்கி உள்ளது.
  • இது மாநிலத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, துப்புரவுப் பணியாளர்களை அடையாளம் காணவும், அவர்களின் எண்ணிக்கையினைக் கணக்கெடுப்பதற்காகவும் ஒரு கைபேசி செயலி வெளியிடப் பட்டது.
  • துப்புரவுப் பணியாளர்களைக் கண்டறிவதற்கான ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டு, அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் இந்தச் செயலியில் பதிவேற்றப்படும்.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டமானது, மாநிலத்தில் உள்ள ஐந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • பின்னர் இது மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப் படும்.
December 30, 2022

நூலகங்களின் நண்பர்கள் திட்டம் 2022

 நூலகங்களின் நண்பர்கள் திட்டம் 2022


எப்பொழுது: டிசம்பர் 2022

எங்கு: திண்டுக்கல்

யாரால்: அன்பில் மகேஷ்

குறிப்புகள்:

  • தமிழக அரசானது, வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் ‘நூலகங்களின் நண்பர்கள்’ என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்' மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் அன்பில் மகேஷ் அவர்களால் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் நூலகங்களுக்குச் செல்ல முடியாத நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் புத்தகங்கள் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் படி, நூலகத்திற்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள் உள்ளிட்டோர் இந்த முன்னெடுப்பின் மூலம் பயனடைவார்கள்.
  • இதற்காக தன்னார்வலர்களின் சேவைகளும் பயன்படுத்தப்பட உள்ளது.
  • ஒரு அறிவு சார்ந்தச் சமூகத்தை மேம்படுத்தச் செய்வதே இத்தகைய முன்னெடுப்பின் ஒரு நோக்கமாகும்.
  • முதல் கட்டமாக இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள 31 மாவட்ட மைய நூலகங்கள், 300 முழுநேர கிளை நூலகங்கள், 1463 கிளை நூலகங்கள். 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது.


உபயம் : தி இந்து