LATEST

Friday, February 16, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 1 Test - 6th std Tamil Unit 1, 2, 3

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 1 Test

 கேள்விகள் : 100                                                    கால நேரம்: 90 நிமிடங்கள்
___________________________________________________________________
                                               6ஆம் வகுப்பு  தமிழ் இயல் 1, 2, 3
 
1. "தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" என்ற பாடலின் ஆசிரியர்?
A. தொல்காப்பியர்       B. பாரதிதாசன்    C. பாவலரேறு பெருஞ்சித்திரனார்        D. பாரதியார்

2. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் - என பாடியவர் யார்?
A. காசி ஆனந்தன்        B. பாரதிதாசன்        C. பாரதியார்            D. அறிவுமதி
 
3. பொருத்துக
a. விளைவுக்கு --- பால்
b. அறிவுக்கு --- வேல்
c. இளமைக்கு --- நீர்
d. புலவர்க்கு --- தோள்
A. 1 2 3 4        B. 4 3 2 1        C. 3 4 1 2        D. 2 3 4 1
 
4. முதல் எழுத்துக்கள் எத்தனை ?        
A. 216        B. 18        C. 12            D. 30

5. 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக திகழ்ந்து கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்?
A. மாணிக்கம்    B. பாரதியார்        C. சுப்புரத்தினம்        D. காசி ஆனந்தன்
6. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A. தமிழங்கள்        B.தமிழெங்கள்        C.தமிழுங்கள்        D.தமிழ்எங்கள்
 
7. சரியானவற்றைத் தேர்ந்தெடு?
கூற்று 1 : பறவைகள் இடம்பெயர்தலை வலசைப் போதல் என்பர்.
கூற்று 2 : நிலவாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன
கூற்று 3 : கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன
கூற்று 4 : நிலவு, விண்மீன், புவிஈர்ப்பு புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம்பெறுகின்றன
A. கூற்று 1, 2 சரி        B. கூற்று 3, 4 சரி        C. கூற்று 1, 4 சரி        D. கூற்று 2, 3 சரி
 
8. நிலவின் குளிர்ச்சியையும், கதிரவனின் ஆற்றலையும், மழையின் பயனையும் --------- என்ற நூல் பாராட்டுகிறது?
A. வளையாபதி        B. சிலப்பதிகாரம்        C. காணி நிலம்        D. மணிமேகலை

9. பாரதியார் எழுதிய நூல்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. பாஞ்சாலி சபதம்        B. குயில் பாட்டு    C. கண்ணன் பாட்டு        D. அழகின் சிரிப்பு
 
10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?
கூற்று : பாரதிதாசன் புரட்சிக் கவி என்று போற்றப்படுகிறார் காரணம் : இவர் தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார்
A. கூற்று சரி, காரணம் சரி            B. கூற்று தவறு, காரணம் சரி
C. கூற்று சரி, காரணம் தவறு            D. கூற்று, காரணம் இரண்டும் தவறு
 
11. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர்?
A. இளங்கோவடிகள்        B. பாரதியார்        C. பாரதிதாசன்    D. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
 
12. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை?
A. ஆர்டிக்ஆலா    B. கப்பல் பறவை        C. சிட்டுக்குருவி        D. செங்கால் நாராய்
 
13. இந்தியாவின் பறவை மனிதர்?
A. தொல்காப்பியர்        B. சலீம் அலி        C. பாரதியார்        D. சத்திமுத்தப்புலவர்
 
14. பொருத்துக
1. தமிழ் --- அப்பர், தேவாரம்
2. தமிழ்நாடு --- தொல்காப்பியம்
3. தமிழன் --- சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம்
A. 2 3 1        B. 3 2 1        C. 1 2 3        D. 1 3 2
 
15. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A. நாடகக் காப்பியம்                B. முத்தமிழ் காப்பியம்   
C. இரட்டைக் காப்பியம்            D. குடிமக்கள் காப்பியம்
 
16. தாவர இலைப் பெயர்களில் பொருந்தாதது எது?
A. நெல்    B. பலா    C. ஆல்        D. வாழை
 
17. தவறானதைத்‌ தேர்ந்தெடு?
A. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள், கட்டுரை, புதினம் ஆகியவை தமிழ் கவிதை வடிவங்கள்
B. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன
C. வலஞ்சுழி எழுத்துகள் --- அ, எ, ஔ , ண, ஞ
D. இடஞ்சுழி எழுத்துகள் --- ட, ய, ழ
 
18. தமிழில் நமக்குக் கிடைத்த மிகப் பழமையான நூல்?
A. தொல்காப்பியம்        B. நன்னூல்        C. தொன்னூல் விளக்கம்        D. தமிழ்நிலம்

19. பொருத்துக
1. மீன் --- நற்றிணை
2. வேளாண்மை --- குறுந்தொகை
3. வெள்ளம் --- கலித்தொகை
4. உழவர் --- பதிற்றுப்பத்து           
A. 2 3 4 1        B. 4 3 2 1        C. 1 2 3 4        D. 3 1 2 4
 
20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 : பாரதிதாசனின் இயற்பெயர் --- சுப்பிரமணியன்
கூற்று 2 : பாரதியாரின் இயற்பெயர் --- சுப்புரத்தினம்
கூற்று 3 : பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் --- மாணிக்கம்
A. கூற்று 1, 2, 3 தவறு                B. கூற்று 1 சரி, கூற்று 2, 3 தவறு       
C. கூற்று 1, 2, 3 சரி                D. கூற்று 1, 2 தவறு கூற்று 3 சரி
 
21. பூப்பது முதல் காய்ப்பது வரை ----- நிலை உண்டு?  
A. 10        B. 5        C. 7        D. 6
 
22. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - என்று தமிழ்தாயின் எதனை பாரதியார் போற்றுகிறார்?  
A. வளமை        B. சீர்மை        C. தொன்மை        D. புதுமை

23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 : தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத்தக்கவையாக உள்ளன
கூற்று 2 : மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
கூற்று 3 : தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்ட நூல்கள். ஆயினும், அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன
A. கூற்று 1 2 3 சரி                    B. கூற்று 1 2 தவறு, கூற்று 3 தவறு
C. கூற்று 1 2 3 தவறு                    D. கூற்று 1 தவறு, கூற்று 2 3 சரி
 
24. சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A. 30        B. 10        C. 18        D. 12
 
25. "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்?
A. இளங்கோவடிகள்        B. நெல்லை சு. முத்து          C. பாவலரேறு பெருஞ்சித்திரனார்    D. சுரதா
 
26. கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வர வேணும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
A. பாரதியார் கவிதைகள்        B. பாப்பா பாட்டு    C. அழகின் சிரிப்பு    D. இருண்ட வீடு
 
27. ரோபோ என்ற சொல்லுக்கு -------- என்று பெயர்?
A. எந்திர மனிதன்        B. அடிமை        C. இணைய மனிதன்        D. ஏதுமில்லை
 
28. ஆர்டிக் ஆலா -------- கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் ?
A. 4000 கி.மீ        B. 22,000 கி.மீ        C. 400 கி.மீ        D. 1600 கி.மீ
 
29. சரியானவற்றை தேர்ந்தெடு :
A. மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்
B. இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும் என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது
C. உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு இங்கிலாந்து
D. ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தை சோபியாவுக்கு வழங்கியுள்ளது
A. அனைத்தும் சரி                B. கூற்று 1 2 3 சரி, கூற்று 3 தவறு   
C. கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு        D. கூற்று 1 2 3 4 தவறு
 

30. தானே இயங்கும் எந்திரம்?   
A. கணினி    B. தானியங்கி         C. அலைபேசி      D. தொலைக்காட்சி
 
31. பொருத்துக
1. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் --- நற்றிணை
2. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி ... ---- தொல்காப்பியம்
3. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு --- கார் நாற்பது
4. கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் --- பதிற்றுப்பத்து
A. 3 1 2 4        B. 4 3 2 1        C. 2 3 4 1        D. 1 2 3 4
 
32. காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் மூலம் பாரதியார் எத்தனை தென்னைமரம் வேண்டும் என்கிறார்?
A. 5,6            B. 10,12        C. 15,20        D. 5,10
 
33. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று : உயிருக்கு முதன்மையானது காற்று
காரணம் : இயல்பாகக் காற்று வெளிப்படும் போது உயிரெழுத்துக்கள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பிறக்கின்றன
A. கூற்று, காரணம் தவறு                B. கூற்று சரி, காரணம் தவறு
C. கூற்று தவறு, காரணம் சரி                D. கூற்று, காரணம் சரி
 
34. பொருத்துக
1. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 1 மாத்திரை
2. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 2 மாத்திரை
3. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 1/2 மாத்திரை
A. 3 1 2        B. 1 2 3        C. 2 1 3            D. 3 2 1
 
35. கழுத்தில் சூடுவது?    
A. தார்        B. கணையாழி    C. தண்டை        D. மேகலை
 
36. வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
A. வெண் + குடை        B. வெண்மை + குடை    C. வெம் + குடை    D. வெம்மை + குடை
 
37. ஒருவருக்குச் சிறந்த அணி?
A. மாலை        B. காதணி    C. இன்சொல்            D. வன்சொல்
 
38. அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்?
A. சிலப்பதிகாரம்        B. ஆத்திச்சூடி        C. மணிமேகலை        D. நாச்சியார் திருமொழி
 
39. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ?
A. துருவப் பகுதி        B. இமயமலை        C. இந்தியா        D. தமிழ்நாடு
 
40. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு?
A. தலையில் சிறகு வளர்தல்
B. மூக்கின் நிறம் மாறுதல்
C. உடலில் கற்றையாக முடி வளர்தல்
D. ஒருவகைப் பறவை வேறுவகை பறவையாக உருமாறி தோன்றும் அளவிற்கு கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்
 
41. கிழவனும் கடலும் (The Old Man and the Sea) என்னும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?        
A. 1990        B. 1965            C. 1954            D. 1968
 
42. வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் யார்?
A. தொல்காப்பியர்    B. பாவலரேறு பெருஞ்சித்திரனார்    C. சத்திமுத்தப் புலவர்    D. பாரதியார்

43. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1 : உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்
கூற்று 2: க,ச,த,ந,ப,ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் இடையில் வரும்
கூற்று 3: ங,ஞ,ய,வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்
கூற்று 4: ஞ --- வரிசையில் ஞ, ஞா , ஞெ , ஞொ ஆகிய நான்கு எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்
A. அனைத்தும் சரி    B. கூற்று 1, 2, 3 மட்டும் சரி    C. கூற்று 1,3, 4 மட்டும் சரி    D. கூற்று 3 மட்டும் சரி
 
44.  பொருத்துக
1. மீத்திறன் கணினி --- Artificial Intelligence
2. வலசை – Whatsapp
3. புலனம் --- Migration
4. கண்டம் --- Super Computer
5. செயற்கை நுண்ணறிவு --- Continent
A. 4 3 2 5 1            B. 1 2 3 4 5        C. 3 2 5 4 1        D. 5 4 3 2 1
 
45. அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆகவேண்டும்! உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! என்று கூறியவர்
A. சுரதா        B. அறிவுமதி        C. காசி ஆனந்தன்        D. பாரதியார்
 
46. இஸ்ரோவின் தலைவர்?
A. அப்துல் கலாம்        B. மயில்சாமி அண்ணாதுரை        C. சிவன்    D. அறிவுமதி
 
47. "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்று பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிட்டவர்?
A. சத்திமுத்தப் புலவர்        B. சலீம் அலி        C. திருவள்ளுவர்    D. இளங்கோவடிகள்
 
48. தமிழை பலவிதங்களில் போற்றியவர்?
A. பாரதியார்        B. பாரதிதாசன்    C. பாவலரேறு பெருஞ்சித்திரனார்    D. நெல்லை சு.முத்து
 
49. பொருந்தாததைத் தேர்ந்தெடு
A. தமிழ் நிலம்        B. தமிழ்ச்சிட்டு        C. கனிச்சாறு        D. தென்மொழி
 
50. பொருத்துக
A. முதலை --- குறுந்தொகை
B. செல் --- தொல்காப்பியம், புறத்திணையியல்
C. பார் --- பெரும்பாணாற்றுப்படை
D. முடி --- தொல்காப்பியம் வினையியல்
E. புகழ் --- தொல்காப்பியம், வேற்றுமையியல்
A. 1 2 3 4 5        B. 5 4 3 1 2        C. 4 5 3 1 2        D. 3 5 4 1 2
 
51. கிழவனும் கடலும் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர்?
A. சாண்டியாகோ    B. சத்திமுத்தப் புலவர்    C. காரல் கபெக்    D. எர்னெஸ்ட் ஹெமிங்வே

52. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?
A. போக்குதல்        B. தள்ளுதல்        C. அழித்தல்        D. சேர்த்தல்
 
53. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர்?
A. சோபியா            B. டீப் புளூ        C. தானியங்கி        D. ரோபோ
 
54. விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூலை எழுதியவர்?
A. லிலியன் வாட்சன்        B. சத்திமுத்தப் புலவர்    C. நெல்லை சு. முத்து        D. அறிவுமதி
 
55. தவறானதைத் தேர்ந்தெடு?
A. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்களை மொழி இறுதி எழுத்துக்கள் என்பர்
B. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய் உடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்
C. ஞ்,ண்,ந்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும்ம் நூலின் இறுதியில் வரும்
D. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்
 
56. பொருத்துக
1. அறத்துப்பால்-25
2. பொருட்பால்- 70
3. இன்பத்துப்பால்-38
A. 3 2 1        B. 2 1 3            C. 1 2 3            D. 3 1 2
 
57. ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்?    
A. தமிழ்க்கும்மி        B. காணி நிலம்        C. இன்பத் தமிழ்    D. சிலப்பதிகாரம்

58. இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி?
A. டாக்டர் கை.சிவன்                    B. டாக்டர் சலீம் அலி
C. டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை        D. டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
 
59. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று: மெய் என்பது உடம்பு என பொருள்படும்
காரணம்: மெய் எழுத்துக்களை ஒலிக்க உடலியக்கத்தின் பங்கு இன்றிமையாதது
A. கூற்று சரி, காரணம் சரி            B. கூற்று சரி, காரணம் தவறு
C. கூற்று தவறு, காரணம் சரி            D. கூற்று தவறு, காரணம் தவறு
 
60. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
A. 3        B. 4        C. 5        D. 6
 
 
61. மெய் எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?
A. இரண்டு மாத்திரை    B. அரை மாத்திரை        C. மூன்று மாத்திரை        D. ஒரு மாத்திரை
 
62. பொருத்துக
1. முத்துச் சுடர் போல -மாடங்கள்
2. தூய நிறத்தில் - தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட- நிலா ஒளி
A. 3 2 1        B. 2 1 3            C. 3 1 2            D. 1 2 3
 
63. சிட்டுக்குருவியின் வாழ்நாள் _______ ஆண்டுகளாகும்?
A. ஐந்து முதல் பத்து ஆண்டுகள்            B. பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
C.பத்து முதல் இருபது ஆண்டுகள்            D.பதினைந்து முதல் இருபது ஆண்டுகள்
 
64. காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர்?
A. சலீம் அலி        B. சத்திமுத்தப் புலவர்        C. பாரதிதாசன்        D. பாரதியார்
 
65. சிட்டுக்குருவிகள் இமயமலைத் தொடரில் ______ மீட்டர் உயரத்தில் கூட வாழ்கின்றன?
A. 400 மீட்டர்        B. 4000 மீட்டர்        C. 1000 மீட்டர்            D. 500 மீட்டர்
 
66. ஆயுத எழுத்தின் வேறு பெயர்களில் தவறானதைத் தேர்ந்தெடு?
A. முப்புள்ளி        B. நெடில்        C. முப்பாற்புள்ளி        D. தனிநிலை, அஃகேனம்
 
67. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாதது எது?
A. வான்புகழ் வள்ளுவர்    B. மாணிக்கம்        C. பொய்யில் புலவர்        D. தெய்வப்புலவர்   
 
68. உடல் நோய்க்கு _________ தேவை?
A. ஔடதம்        B. இனிப்பு            C. உணவு        D. உடை
 
69. எதிர் சொற்களைப் பொருத்துக
1. அணுகு X தெளிவு
2. ஐயம் X சோர்வு
3. ஊக்கம் X பொய்மை
4. உண்மை X விலகு
A. 4 3 2 1        B. 3 2 1 4        C. 1 2 3 4        D. 4 1 2 3
 
70. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
A. ஊக்கம்        B. சிந்தனை            C. அனுபவம்        D. இனிப்பு
 
 71. ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் - என்று கூறுபவர்?
A. பாரதியார்        B. இளங்கோவடிகள்        C. நெல்லை சு. முத்து        D. காசி ஆனந்தன்
 
72. நுட்பமாக சிந்தித்து அறிவது?
A. நூலறிவு        B. நுண்ணறிவு        C. சிற்றறிவு            D. பட்டறிவு
 
73. மனிதன் எப்போதும் உண்மையையே ______
A. உரைக்கின்றான்        B. உழைக்கின்றான்        C. உறைகின்றான்        D. உரைகின்றான்
 
74. தவறானதைத் தேர்ந்தெடு?
A.ஆண்குருவியின் தொண்டைப் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர் பழுப்பாக இருக்கும்
B.பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
C. சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தை சார்ந்தது. கூடுகட்டும் காலங்களை சத்தமிட்டு கொண்டே இருக்கும்
D.கூடு கட்டிய பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். 14 நாட்கள் அடைகாக்கும். 15ஆம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
 
75. கிணறு' என்பதைக் குறிக்கும் சொல்?  
A. ஏரி        B. கேணி        C. குளம்    D. ஆறு
 
76. கதிரவனின் மற்றொரு பெயர்?   
A. புதன்    B. ஞாயிறு    C. சந்திரன்        D. செவ்வாய்
 
77. தவறானதைத் தேர்ந்தெடு?
A. மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்
B. ஆயுத எழுத்து சொல்லின் இறுதியில் மட்டுமே வரும்
C. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்
 
78. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்________
A. அடுக்குகள்        B. கூரை        C. சாளரம்        D. வாயில்
 
79. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் - என்று இயற்கையைப் போற்றும் நூல்?
A. தொல்காப்பியம்        B. நாலடியார்        C. சிலப்பதிகாரம்        D. மணிமேகலை
 
80. ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்?
A. திருவள்ளுவர்        B. தொல்காப்பியர்        C. ஔவையார்    D. இளங்கோவடிகள்
 
81. "நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர்?
A. சலீம் அலி        B. காசி ஆனந்தன்        C. சத்திமுத்தப் புலவர்        D. அறிவுமதி
 
82. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து ஆழ‌ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி - என யாருடைய பாடலில் கூறப்பட்டுள்ளது?
A. திருவள்ளுவர்        B. ஔவையார்        C. தொல்காப்பியர்        D. கபிலர்
 
83. கடல் நீர் ஆவியாகி மேகமாகும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். என்று பழந்தமிழ் இலக்கியங்களான _________ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A. முல்லைப்பாட்டு        B. திருப்பாவை        C. பதிற்றுப்பத்து        D. பரிபாடல்
 
84. செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
A. செம்மை + பயிர்        B. செம் + பயிர்        C. செமை + பயிர்        D. செம்பு + பயிர்
 
85. வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர்?
A. அறிவுமதி        B. வாணிதாசன்        C. காசி ஆனந்தன்        D. நெல்லை சு.முத்து
 
86. தமிழின் முதல் காப்பியம்?
A. சிலப்பதிகாரம்        B. அகநானூறு        C. தொல்காப்பியம்        D. நாலடியார்
 
87. இளங்கோவடிகளின் காலம்?
A. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு            B.கி.பி.‌ மூன்றாம் நூற்றாண்டு
C. கி.பி. நான்காம் நூற்றாண்டு            D. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
 
88. தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு?
A. நூலறிவு        B. செயற்கை நுண்ணறிவு        C. கணினி        D. சிற்றறிவு
 
89. பொருத்துக
1. க்,ச்,ட்,த்,ப்,ற் --- ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன
2. ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் --- ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன
3. ய்,ர்,ல்,வ்,ழ்,ள் --- ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன
A. 1 2 3        B. 3 2 1        C. 2 1 3        D. 3 1 2


90. தவறானதைத் தேர்ந்தெடு?
A. பறவைகள் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி எனப்படும்
B. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி
C. சலீம் அலி தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றை படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.
D. சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சி நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்
 
91. பின்வருவனவற்றில் உயிர்மெய் எழுத்துகள் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன
கூற்று 2: உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
கூற்று 3: வரிவடிவம் உயிர் எழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு மெய்யெழுத்தை ஒத்திருக்கும்
கூற்று 4: முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்
A. அனைத்தும் சரி                    B. அனைத்தும் தவறு
C. கூற்று 1 2 சரி, கூற்று 3 4 தவறு            D. கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு
 
92. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?
கூற்று 1:
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்
 
கூற்று 2: திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. "திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது
 
கூற்று 3: திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறைவாழ்த்து முதலிய பல சிறப்பு பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
D. திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று
 
93. பொருத்துக :
1. கமுகு (பாக்கு) - கூந்தல்
2. சப்பாத்திக்கள்ளி - மடல்
3. பலா - இலை
4. நாணல்- தோகை
5. கோரை- புல்
A. 5 4 3 2 1            B. 4 2 1 3 5        C. 1 2 3 4 5            D. 3 1 5 2 4
 
94. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்
கூற்று 2: சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை)
A. அனைத்தும் சரி                B. அனைத்தும் தவறு   
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு            D. கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
 
95. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: இனிப்பு அல்லாத காய் பாகற்காய் = பாகு + அல் + காய்
கூற்று 2: இயல் தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும் ; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
A. அனைத்தும் சரி                B. அனைத்தும் தவறு
C. கூற்று 1 சரி , கூற்று 2 தவறு            D. கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
 
96. பொருத்துக
A. கோடை --- திருக்குறள் --- 554
B. அரசு --- அகநானூறு --- 42
C. புகழ் --- குறுந்தொகை --- 72
D. செய் --- தொல்காப்பியம், வேற்றுமையியல் --- 71
A. 4 3 2 1            B. 1 2 3 4            C. 2 1 4 3        D. 3 4 1 2
 
97. பொருத்துக
1. ரோபோ --- செக்
2. காரல் கபெக் --- மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியின் வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ்
3. 1997 --- அடிமை
4. சோபியா - சவுதி அரேபியா
A. 1 2 3 4        B. 3 1 2 4        C. 4 3 2 1        D. 2 4 1 3
 
98. பொருத்துக
1. காணி --- நில அளவை குறிக்கும் சொல்
2. மேரு ---இமயமலை
3. ஊழி --- நீண்டதொரு காலப்பகுதி
4. அளி --- கருணை
5. திகிரி --- ஆணைச் சக்கரம்
A. 5 4 3 2 1        B. 2 3 1 5 4        C. 1 2 3 4 5            D. 3 1 4 2 5
 
99. சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 23 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்
கூற்று 2: அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை ஆண்டுதோறும் "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடப்படுகிறது
A. கூற்று 1 சரி        B. கூற்று 2 சரி        C. அனைத்தும் சரி        D. அனைத்தும் தவறு
 
100. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
கூற்று 1: தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்தவன் சோழமன்னன். அவனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ச்சி பொருந்தியது
கூற்று 2: காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டில் ஆட்சி செய்பவன் சோழமன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களை உடைய இமயமலையை இடப்புறமாக சுற்றி வருகிறது.
A. கூற்று 1 2 சரி                B. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு       
C. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி            D. கூற்று 1 2 தவறு
    

 

No comments:

Post a Comment