Vyuha 1.0 TNPSC Group 4 - Day 14 Test - 9th std Tamil Unit 5
மேக்மீ மெடல்
TNPSC Group 4 பயிற்சிVyuha 1.0 TNPSC Group 4 - Day 14 Test
9th-std (unit - 5)
1. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக திகழ்ந்தவர்
அ) மாதவி ஆ) கண்ணகி இ) மணிமேகலை ஈ) காரைக்கால் அம்மையார்
2. இறைவனுக்கு பாமாலை சூட்டிய பெண்கள் யார்?
அ) ஒளவையார், ஆண்டாள் ஆ) ஆண்டாள், காரைக்கால் அம்மையார்
இ) நக்கண்ணையார், ஆண்டாள் ஈ) நப்பசலையர், ஒளவையார்
3. மகளிருக்கெதிரான கொடுமைகளை மாண்புடனே எதிர்த்த பெண்மணி யார்?
அ) மூவலூர் இராமாமிர்தம் ஆ) முத்துலெட்சுமி
இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய் பூலே
4.மனித குலத்தின் மாணிக்கமாய் மக்கள் மனங்களில் நிறைந்த பெண் யார்?
அ) முத்துலெட்சுமி ஆ) மூவலூர் இராமாமிர்தம்
இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய்
5. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
அ) முத்துலெட்சுமி ஆ) மூவலூர் இராமாமிர்தம் இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய்
6. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
அ) மூவலூர் இராமாமிர்தம் ஆ) முத்துலெட்சுமி
இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய் பூலே
7. சமூக சேவகியாக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் யார்?
அ) மூவலூர் இராமாமிர்தம் ஆ) முத்துலெட்சுமி இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய் பூலே
8. இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
அ) முத்துலெட்சுமி ஆ) மூவலூர் இராமாமிர்தம் இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய்
9. சட்ட மேலவைக்கு தேர்தெடுக்குப்பட்ட முதல் பெண்மணி யார்?
அ) முத்துலெட்சுமி ஆ) மூவலூர் இராமாமிர்தம் இ) பண்டித ரமாபாய் ஈ) சாவித்திரிபாய்
10. அடையாற்றில் அவ்வை இல்லம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ) 1952 ஆ) 1930 இ) 1940 ஈ) 1950
11. முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1952 ஆ) 1954 இ) 1930 ஈ) 1968
12. முத்துலெட்சுமி அவர்கள் பின்வரும் எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்
1. குழந்தை திருமணத் தடைச் சட்டம்
2. இருதாரத் தடைச்சட்டம்
3. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்
4. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்
அ) 1, 3 மட்டும் ஆ) 2, 3, 4 இ) 3 மட்டும் ஈ) அனைத்தும்
13.முத்துலெட்சுமி ரெட்டி வாழ்ந்த காலம் ___.
அ) 1886-1968 ஆ) 1858 – 1922 இ) 1883 – 1962 ஈ) 1870 – 1960
14. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர்
அ) பாரதி ஆ) பாரதிதாசன் இ) பெரியார் ஈ) ஒளவை
15. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடி முழக்கம் செய்தவர் யார்?
அ) பாரதி ஆ) பாரதிதாசன் இ) நாமக்கல் கவிஞர் ஈ) ஈ. வெ. ரா
16. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?
அ) பாரதி ஆ) பாரதிதாசன் இ) நாமக்கல் கவிஞர் ஈ) ஈ. வெ. ரா
17. பெண் கல்வியை முதன்முதலில் பரிந்துரை செய்த குழு ____
அ) கோத்தாரி குழு ஆ) ஹண்டர் குழு இ) சர்க்காரியா குழு ஈ)தேசியபெண்கல்வி குழு
18. முதல் பெண்களுக்கான பள்ளியை மராட்டிய மாநிலத்தில் தொடங்கியவர்கள் யார்?
அ) ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே ஆ) முத்துலெட்சுமி, பண்டித ரமாபாய்
இ) பெரியார், பண்டித ரமாபாய் ஈ) இராமாமிர்தம், பண்டித ரமாபாய்
19.மராட்டிய மாநிலத்தில் முதல் பெண்களுக்கான பள்ளி தொடங்க காரணமாக இருந்த அறிக்கை
அ) கோத்தாரி குழு அறிக்கை ஆ )ஹண்டர் குழு அறிக்கை இ)தேசியபெண்கல்விகுழு அறிக்கை
20. ஹண்டர் குழு பெண் கல்வியை பரிந்துரை செய்த ஆண்டு
அ) 1952 ஆ) 1868 இ) 1858 ஈ) 1882
21. இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
அ) கைலாஷ் சத்யார்த்தி ஆ) முத்துலெட்சுமி இ) பெரியார் ஈ) ஹண்டர்
22. பண்டித ரமாபாய் அவர்கள் வாழ்ந்த காலம்
அ) 1886 – 1968 ஆ) 1858-1922 இ) 1883-1962 ஈ) 1870 – 1960
23. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் அவர்களின் காலம்
அ) 1886-1968 ஆ) 1858 – 1922 இ) 1883 – 1962 ஈ) 1870 – 1960
24. கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு
அ) 2016 ஆ) 2013 இ) 2014 ஈ) 2015
25. குழந்தையை பாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
அ) 80000 ஆ) 800000 இ) 8000 ஈ) 8000000
26.பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய வீரச்சிறுமி யார்?
அ) ராமாபாய் ஆ) மலாலா இ) சோபியா ஈ) சாவித்திரிபாய்
27.பெண் கல்வி வேண்டுமென மலாலா போராடிய நாடு எது?
அ) ஆப்கானிஸ்தான் ஆ) இஸ்ரேல் இ) பாகிஸ்தான் ஈ) கஜகஸ்தான்
28.பெண் கல்விக்காக போராட தொடங்கிய போது மலாலாவின் வயது
அ) 11 ஆ) 13 இ) 15 ஈ) 12
29. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?
அ) சாவித்திரிபாய் பூலே ஆ) ஜோதிராவ் பூலே இ) ஐடாஸ் சோபியா ஈ) முத்துலெட்சுமி
30. சாவித்திரிபாய் பூலே வாழ்ந்த காலம் ____
அ) 1831 – 1897 ஆ) 1886 – 1968 இ) 1858 – 1922 ஈ) 1883 – 1962
31. கற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின் பொற்காலம் எது?
அ) இரும்பு காலம் ஆ) கற்காலம் இ) சங்க காலம் ஈ) சங்கம் மருவிய காலம்
32.பாட்டும் தொகையும் உருவான காலம் ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்
அ) இரும்பு காலம் ஆ) கற்காலம் இ) சங்க காலம் ஈ) சங்கம் மருவிய காலம்
33. 1964 ஆம் ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது?
அ) கோத்தாரி கல்வி குழு ஆ) சர்க்காரியா குழு
இ) ஹண்டர் குழு ஈ) தேசிய பெண் கல்வி குழு
34.மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்
அ) 1903 – 1943 ஆ) 1913 – 1933 இ) 1903 – 1953 ஈ) 1913 – 1953
35. சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
அ) 1919 ஆ) 1939 இ) 1929
36.1929 ல் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டம் எதனுடன் தொடர்புடையது
அ) குழந்தை தொழிலாளர் ஆ) குழந்தை திருமணம்
இ) விதவைகள் மறுமணம் ஈ) சதி ஒழிப்பு
37. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார்?
அ) இராஜேஸ்வரி ஆ) நீலாம்பிகை இ) சுரதா ஈ) சிவகாமி அம்மை
38. இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார்?
அ) நீலாம்பிகை ஆ) சாரதா இ) இராஜேஸ்வரி ஈ) சிவகாமி
39. தொல்காப்பியம், திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர் யார்?
அ) இராஜேஸ்வரி ஆ) நீலாம்பிகை இ) சாரதா ஈ) சிவகாமி அம்மை
40. ஈ. வெ. ரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் யாருடன் தொடர்புடையது
அ) பெண்கள் ஆ) முதியோர்கள் இ) ஊனமுற்றவர்கள் ஈ) குழந்தைகள்
41. தனித்தமிழில் எழுத விரும்புவோருக்கு பயனுள்ளதாக யாருடைய நூல்கள் விளங்குகின்றன
அ) இராஜேஸ்வரி ஆ) நீலாம்பிகை இ) சாரதா ஈ) திரு. வி. க
42.கோத்தாரி கல்விக் குழு மகளிர் கல்வியை பரிந்துரைத்த ஆண்டு
அ) 1964 ஆ) 1864 இ) 1974 ஈ) 1994
43.புதுமைக் கருத்துகளை இயம்பும் மறுமலர்ச்சி இலக்கியங்கள் எந்த நூற்றாண்டில் எழுந்தவை?
அ) 18 ஆ) 20 இ) 19 ஈ) 17
44. கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசனின் படைப்புகள் எவை?
1. இருண்ட வீடு
2. குடும்ப விளக்கு
3. பாண்டியன் பரிசு
4. தமிழியக்கம்
5. அழகின் சிரிப்பு
அ) அனைத்தும் சரி ஆ) 1, 2, 3 இ) 1, 2, 5 ஈ) 2, 3, 5
45. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ” என்று பாடியவர் யார்?
அ) பாரதி ஆ) பாவேந்தர் இ) கவிமணி
46. “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா. . .” என்று பாடியவர் யார்?
அ) பாரதி ஆ) பாவேந்தர் இ) கவிமணி ஈ) பெரியார்
47. காரியாசான் குறித்த கூற்றுகளுள் எது தவறானது?
1. மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
2. காரி என்பது இயற்பெயர்
3. ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
அ) அனைத்தும் சரி ஆ) 1, 2 சரி இ) 1, 3 சரி ஈ) 2, 3 சரி
48.10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
அ) பாரதியார் ஆ) வள்ளலார் இ) விக்டர் ஹியூகோ ஈ) அலெக்சாண்டர்
49. அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டத்தை பெற்ற போது பாரதியாரின் வயது _____.
அ) 10 ஆ) 11 இ) 15 ஈ) 16
50. பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து கலீலியோ ஆராய்ந்த போது அவரின் வயது_____.
அ) 10 ஆ) 11 இ) 17 ஈ) 16
51.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளை கூறும் நூல் எது?
அ) திரிகடுகம் ஆ) ஏலாதி இ) சிறுபஞ்ச மூலம் ஈ) நன்னூல்
52.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துகளை கூறும் நூல் எது?
அ) திரிகடுகம் ஆ) ஏலாதி இ) சிறுபஞ்ச மூலம் ஈ) நன்னூல்
53. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன்” என்று கூறியவர் யார்?
அ) காந்தி ஆ) நேரு இ) ஆபிரகாம் லிங்கன் ஈ) அலெக்சாண்டர்
54.நடுவணரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
அ) 2008 ஆ) 2009 இ) 2010 ஈ) 2011
55. ____ ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
அ) 2008 ஆ) 2009 இ) 2010 ஈ) 2011
56. “நல்ல வரலாறுகளை படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்” என்று கூறியவர் யார்?
அ) காந்தி ஆ) அண்ணா இ) நேரு ஈ) விவேகானந்தர்
57. “தென்னகத்து பெர்னாட்ஷா” என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) பெரியார் ஆ) காமராஜர் இ) அண்ணா ஈ) வ. உ. சி
58. உலகின் மிகப் பெரிய நூலகம் எது? எங்கு அமைந்துள்ளது?
அ) லைப்ரரி ஆப் காங்கிரஸ் – அமெரிக்கா ஆ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
இ) தேசிய நூலகம் – கல்கத்தா ஈ) திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
59. “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும்” என்று கூறியவர் யார்?
அ) பெரியார் ஆ) காமராஜர் இ) அண்ணா ஈ) கதே
60. “உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!” என்று கூறியவர் யார்?
அ) பெரியார் ஆ) காமராஜர் இ) அண்ணா ஈ) கதே
61.யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது?
அ) அண்ணா – ஆகஸ்டு 9 ஆ) சீர்காழி இரா. அரங்கநாதன் – ஆகஸ்டு 9
இ) சீர்காழி இரா. அரங்கநாதன் – ஆகஸ்டு 6 ஈ) அண்ணா – ஆகஸ்டு 6
62. பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
அ) பெயரெச்சம், உவமைத்தொகை ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
இ) வினையெச்சம், உவமை ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
63. பொருத்துக
1. அரங்கு – i) நாடகம் ஆடும் இடம்
2. ஒட்பம் – ii) அறிவு
3. கான் – iii) காடு
4. நசை – iv) அன்பு
5. பொருநர் – v) கூத்தர்
அ) i ii iii iv v ஆ) v iv iii ii I இ) iv iii ii i v ஈ) ii iii v i iv
64. பொருத்துக
1. சமூக சீர்திருத்தவாதி – i) Sentence
2. தன்னார்வலர் – ii) Seline soil
3. களர்நிலம் – iii) volunteer
4. சொற்றொடர் – iv) Social Reformer
அ) i ii iii iv ஆ) iv iii ii I இ) iv iii i ii ஈ) ii iii i iv
65. சரியான இணையை தேர்ந்தெடு
1. முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
2. கல்வியில் நாடகம் – பிரளயன்
3. மலாலா – கரும்பலகை யுத்தம்
அ) அனைத்தும் சரி ஆ) 1, 2 சரி இ) 2, 3 சரி ஈ) 1, 3 சரி