LATEST

Wednesday, March 13, 2024

March 13, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 26 Test - 10th std Tamil Unit 8

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 26 Test
 
 கேள்விகள் : 70                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std – Tamil Unit 8


1. மன்னன் மக்களுக்குக் கொடை அளிப்பது போன்ற, 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் எங்கு உள்ளது?
A) ஆதிச்சநல்லூர்    B) கீழடி    C) கழுகுமலை        D) சிதம்பரம்

2.சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், _______________?
A) சங்ககாலம்     B) முகலாயர்கள் காலம்   C) நாயக்கர்களின் காலம்    D) இவற்றில் ஏதுமில்லை

3. சங்க காலத்தில் _______________ மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்.
A) புகழை        B) அறத்தை        C) அறிவை        D) செல்வத்தை

4. மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான _______________ மனிதன் ஏற்க வேண்டும்.
A) செல்வத்தை    B) அறிவை        C) அறத்தை        D) புகழை

5. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க கால அறங்கள் இயல்பானவை. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று திறனாய்வாளர் _______________ கூறுகிறார்.
A) வீரமாமுனிவர்    B) ஜி.யு.போப்        C) கால்டுவெல்    D) ஆர்னால்டு

6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன.
II. சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.
A) I, II இரண்டுமே தவறு    B) I, II இரண்டுமே சரி        C) I மட்டும் சரி   D) II மட்டும் சரி

7. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை – பற்றிய சரியான கூற்று எது?
I. அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது.
II. சங்ககால மக்கள் அறம் செய்து, அதன்மூலம் வணிக நோக்கம் அடைவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
III. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) I, II, III அனைத்தும் சரி   D) I, III மட்டும் சரி

8. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
A) புறநானூறு        B) அகநானூறு        C) நற்றிணை        D) குறுந்தொகை

9. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ______________ பற்றி _______________ குறிப்பிட்டுள்ளார்.
A) ஆய், ஏணிச்சேரி முடமோசியார்        B) விச்சிக்கோ நன்னன், பரணர்
C) தொண்டைமான் இளந்திரையன், சயம் கொண்டார்
D) அதியமான் நெடுமான் அஞ்சி, ஔவையார்

10. “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” – இப்பாடலில் கூறப்படும் மையக்கருத்து என்ன?
I. வணிகம் செய்வதால் வரும் பயன்
II. வணிகத்தில் அதிக இலாபம் ஈட்டுபவர்க்கு மறுபிறப்பு என்ற ஒன்றில்லை
III. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
IV. நோக்கமின்றி அறம்செய்வதே மேன்மை தரும்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) III, IV மட்டும் சரி        D) I, IV மட்டும் சரி

11. சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் _______________ முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.
A) மக்களை        B) அரசர்களை        C) புலவர்களை        D) தேவர்களை

12. ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) கலித்தொகை, கபிலர்            B) மதுரைக் காஞ்சி, மாங்குடி மருதனார்
C) அகநானூறு, ஒளவையார்            D) புறநானூறு, மதுரை மருதன் இளநாகனார்

13. ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’ – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை    B) மதுரைக் காஞ்சி     C) அகநானூறு            D) புறநானூறு

14.நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார், _______________?
A) உருத்திர சன்மர்                    B) ஊன் பொதிப் பசுங்குடையார்
C) புகழேந்திப் புலவர்                    D) நச்சினார்க்கினியர்

15. அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர். “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்கிறது _______________?
A) மதுரைக்காஞ்சி    B) குறுந்தொகை    C) கலித்தொகை    D) ஐங்குறுநூறு

16. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை கூறும் நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) கலித்தொகை, கபிலர்            B) மதுரைக் காஞ்சி, மாங்குடி மருதனார்.
C) அகநானூறு, ஒளவையார்            D) புறநானூறு, மதுரை மருதன் இளநாகனார்

17.அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி ‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ என்று _______________ நூல் கூறுகிறது.
A) புறநானூறு        B) அகநானூறு        C) கலித்தொகை        D) ஐங்குறுநூறு

18.உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி _______________ குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.
A) பரிபாடல்        B) நற்றிணை        C) பட்டினப்பாலை    D) மதுரைக்காஞ்சி

19. தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை _______________ குறிப்பிட்டிருக்கிறார்.
A) ஒளவையார்    B) ஆவூர் மூலங்கிழார்      C) சயம் கொண்டார்        D) சேக்கிழார்

20.எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் – இந்தப் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு        B) அகநானூறு        C) கலித்தொகை

21. வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி. “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” – இந்தப் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் மற்றும் இந்த பாடல்வரிகளில் எதைப்பற்றி குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது?
A) கலித்தொகை, மருதன் இளநாகன், அன்பு        B) ஐங்குறுநூறு, அம்மூவனார், செல்வம்
C) புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், கொடை
D) அகநானூறு, ஒளவையார், போர்

22. கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப் பெருமை _______________ மற்றும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
A) ஐங்குறுநூறு    B) பரிபாடல்        C) சிறுபாணாற்றுப்படை    D) நன்னூல்

23. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. _______________ நூல் சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.
A) ஐங்குறுநூறு    B) பரிபாடல்        C) சிறுபாணாற்றுப்படை    D) பதிற்றுப்பத்து

24. “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டவர் யார்?
A) மருத்துவர்கள்    B) அமைச்சர்கள்    C) புலவர்கள்        D) வள்ளல்கள்

25. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தனை _______________ பாராட்டுகிறார்.
A) தொல்காப்பியர்    B) நக்கீரர்        C) சீத்தலைச் சாத்தனார்        D) கம்பர்

26. வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று _______________ குறிப்பிடுகிறார்.
A) பெரும்பதுமனார்        B) நக்கீரர்        C) ஒளவையார்        D) கம்பர்

27. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார், _______________?
A) பெரும்பதுமனார்        B) நக்கீரர்        C) ஒளவையார்      D) நச்செள்ளையார்

28. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார், _______________?
A) பெரும்பதுமனார்        B) நக்கீரர்    C) ஒளவையார்    D) நச்செள்ளையார்

29. பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார், _______________?
A) பரணர்        B) நக்கீரர்    C) பெருந்தலைச் சாத்தனார்    D) நச்செள்ளையார்

30. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாக _______________ குறிப்பிட்டுள்ளார்.
A) பரணர்        B) நக்கீரர்    C) பெருந்தலைச் சாத்தனார்        D) கபிலர்

31.எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் _______________ பாராட்டுகிறார்.
A) பரணர்    B) நக்கீரர்        C) பெருந்தலைச் சாத்தனார்            D) கபிலர்

32. வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் _______________ நூலில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.
A) குறுந்தொகை    B) புறநானூறு        C) ஐங்குறுநூறு    D) கலித்தொகை

33. பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘_______________’ என்று குறிப்பிடுகிறார்.
A) உதவியர்        B) உதவியாகினான்    C) உதவியல்        D) உதவியாண்மை

34. தன்னைத் தாண்டிப் பிறரைப் பற்றிச் சிந்திக்கும்போது, இருக்கும் நிலையை ஒதுக்கி, தான் இருக்க வேண்டிய நிலை எது என்பதை மனிதன் உணர்கிறான் எனலாம். அன்பு என்ற சுடருக்குத் _______________ எண்ணெய்யாக இருக்க முடியும்?
A) அறிவு    B) தியாகம்            C) அரவணைப்பு        D) நன்றி

35. “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்” – என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி குறிப்பிடும் நூல் மற்றும் ஆசிரியர் யார்?
A) கலித்தொகை, நல்லந்துவனார்                 B) ஐங்குறுநூறு, அம்மூவனார்
C) புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் D) அகநானூறு, ஒளவையார்

36. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” – ‘ உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான்’ என்கிறார் _______________?
A) கலித்தொகை, நல்லந்துவனார்                B) ஐங்குறுநூறு, அம்மூவனார்
C) புறநானூறு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்  D) நற்றிணை, நல்வேட்டனார்

37.உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று _______________ குறிப்பிடுகிறார். இதனால்தான் ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.
A) நல்லாதனார்    B) பெருங்கடுங்கோ    C) ஒளவையார்    D) முன்றுறை அரையனார்

38. ‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்கிறது _______________?
A) எகிப்து நாட்டு நூலகம்    B) தொல்காப்பியம்    C) சீன நாட்டுத் தாவோயியம்

39. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”, “பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
II. நாக்கு ஓர் அதிசயத் திறவு கோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி    C) I, II இரண்டுமே சரி    D) I, II இரண்டுமே தவறு

40.‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை _______________ நூல் குறிப்பிடுகின்றது; இதற்கு மாறாகப் ‘பொய் மொழிக் கொடுஞ்சொல்’ என்று பொய்யைக் குறிப்பிடுகிறது. நிலம் புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பது பல பாடல்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது. வாய்மையைப் பற்றி, சங்ககால மக்கள் கொண்டிருந்த கருத்தழுத்தத்தை இப்பகுதிகள் புலப்படுத்துகின்றன. பொய்ச்சான்று கூறாமையும் வலியுறுத்தப்பட்டது.
A) நற்றிணை        B) புறநானூறு        C) ஐங்குறுநூறு    D) கலித்தொகை

41.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம்.
II. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமானது.
III. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் எனலாம்.
A) I மட்டும் சரி        B) II, III மட்டும் சரி    C) I, II மட்டும் சரி    D) I, II, III அனைத்தும் சரி

42. கி.பி. (பொ.ஆ.) _______________ நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர் பூண்டு சீனாவுக்குச் சென்றார். _______________ சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ஜென்” தத்துவம். இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
A) முதலாம், சமண    B) ஆறாம், பௌத்த        C) நான்காம், இந்து    D) எட்டாம், யூதம்

43. கொன்றை வேந்தன் என்பது ______________ நூல்.
A) சிற்றிலக்கிய    B) முற்கால அற    C) சங்க இலக்கிய        D) பிற்கால அற

44. சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம் _______________?
A) அறநெறிக் காலம்        B) இருண்ட காலம்    C) பக்திக் காலம்    D) பொற் காலம்

45. போதி தருமருக்குச் _______________ கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
A) அரேபியர்கள்    B) எகிப்தியர்கள்    C) அமெரிக்கர்கள்        D) சீனர்கள்

46. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – 1. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
II. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன் – 2. பேகன்
III. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – 3. மலையமான் திரு முடிக்காரி
IV. எல்லாவற்றையும் கொடுப்பவன் – 4. அதியன்
A) I – 1; II – 2; III – 3; IV – 4            B) I – 4; II – 1; III – 2; IV – 3    
C) I – 4; II – 3; III – 2; IV – 1            D) I – 2; II – 4; III – 1; IV – 3

47. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. வள்ளல் எழுவரின் கொடைப் பெருமை – 1. சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார்
II. ஆற்றுப்படை இலக்கியங்கள் – 2. கொடை இலக்கியங்கள்
III. சேர அரசர்களின் கொடைப் பதிவு – 3. பதிற்றுப்பத்து
IV. “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” – 4. வள்ளல்கள்
A) I – 1; II – 2; III – 3; IV – 4            B) I – 4; II – 1; III – 2; IV – 3
C) I – 4; II – 3; III – 2; IV – 1            D) I – 2; II – 4; III – 1; IV – 3

48. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. இயக்கமே உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை. இயங்குதலின்றி உலகில்லை, உயர்வில்லை.
II. கடல் அலைகளைப்போல் பணிகளும் ஓய்வதில்லை. அலைகள் ஓய்ந்திடின் கடலுமில்லை.
III. பணிகள் ஓய்ந்திடின் உலகமுமில்லை. தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளர வேண்டும்.
A) I மட்டும் சரி        B) II, III மட்டும் சரி    C) I, II, III அனைத்தும் சரி    D) I, II மட்டும் சரி

49. சாளரத்தின் கதவுகள், சட்டம்; காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும். கரையான் மண் வீடு கட்டும். அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக்கொக்கி பொருத்தினேன். காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை: அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை! – இந்த கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) கொடி முல்லை, வாணிதாசன்            B) கொய்யாக் கனி, பெருஞ்சித்திரனார்
C) குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D) கோடை வயல் (ஞானம்), தி.சொ.வேணுகோபாலன்

50.இவர் திருவையாற்றில் பிறந்தவர். மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு “மீட்சி விண்ணப்பம்” – இந்த கூற்று யாரைப்பற்றியது?
A) சி.சு.செல்லப்பா    B) தி.சொ.வேணுகோபாலன்        C) ந. காமராசன்

51. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
I. கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன? அவன் பணி என்ன? மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
II. காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி    C) I, II இரண்டுமே சரி         D) I, II இரண்டுமே தவறு

52.கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு (காலக்கணிதம்)    B) பாரதியார் கவிதைகள்
C) இசையமுது (முதலாம் தொகுதி)                D) நாமக்கல் கவிஞர் பாடல்கள்

53.ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்! ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! – இந்த பாடல்வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?
A) துரை மாணிக்கம்        B) கண்ணபிரான்    C) பிச்சமுத்து        D) முத்தையா

54. உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன் வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்! பண்டோர் கம்பன், பாரதி, தாசன் சொல்லா தனசில சொல்லிட முனைவேன் – இந்தப்பாடல் வரியின் ஆசிரியர் பிறந்த ஊர் எது?
A) திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி    B) சிவகங்கை மாவட்டத்தின் சிறுகூடல்பட்டி
C) தேனி மாவட்டத்தின் பட்டிவீரன் பட்டி    D) திண்டுக்கல் மாவட்டத்தின் விருவீடு

55. புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது! வளமார் கவிகள் வாக்குமூலங்கள் இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு! கல்லாய் மரமாய்க் காடுமே டாக மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்! – இந்த பாடல் வரியின் ஆசிரியருடைய பெற்றோர் பெயர் என்ன?
A) சாத்தப்பன் – விசாலாட்சி                B) வெங்கட்ராமன் – அம்மணியம்மாள்
C) முருகானந்தம் – சுவர்ணம்மாள்            D) சுப்பையா – செல்லம்மாள்

56. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம் – இந்த பாடல் வரியின் ஆசிரியர், தமிழக அரசின் _______________ ஆக சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
A) சட்டமன்ற மேலவை உறுப்பினர்            B) சட்டமன்ற கீழவை உறுப்பினர்
C) ஆளுநர்                        D) அரசவைக் கவிஞர்

57. _______________ ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார், கண்ணதாசன்.
A) 1945            B) 1947            C) 1949            D) 1951

58. கீழ்க்கண்ட கூற்றுகளுள் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய சரியான கூற்று எது?
I. திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
II. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
III. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
IV. கண்ணதாசன் அவர்களுக்கு 1960 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது அளித்து இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.
A) I, II மட்டும் சரி    B) II, III, IV மட்டும் சரி     C) I, III, IV மட்டும் சரி    D) I, II, III மட்டும் சரி

59. நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான் மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டதென்றன் – இந்தப் பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) கம்பர்    B) ஒட்டக்கூத்தர்    C) புகழேந்திப் புலவர்            D) ஒளவையார்

60. நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி வேறு யாரம்மா – இந்தப் பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) வாணிதாசன்    B) பாரதிதாசன்    C) கண்ணதாசன்        D) வாலி

61. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியது எது?
I. நாளுக்கு ஒருமுறை மலர்வது – 1. குறிஞ்சி
II. ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது – 2. சண்பகம்
III. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது – 3. மூங்கில்
IV. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது – 4. பிரம்ம கமலம்
A) I – 1; II – 2; III – 3; IV – 4                      B) I – 4; II – 1; III – 2; IV – 3  
C) I – 4; II – 3; III – 2; IV – 1                    D) I – 2; II – 4; III – 1; IV – 3

62. திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்’ – இந்தத் திருமந்திரத்தை பூரணர் யாரிடம் கூறினார்?
I. முதலியாண்டான்                II. இராமானுசர்
III. சௌம்ய நாராயணன்            IV. கூரேசர்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) I, II, IV மட்டும் சரி   D) I, II, III, IV அனைத்தும் சரி

63. எம் பெருமானே! உங்களுக்கு இருந்த பரந்த அருள் உள்ளம் இதுவரை எனக்கு இல்லாமல் போனதே! நம் பரமாச்சாரியார் ஆளவந்தாரின் திரு உள்ளத்தை அறிந்தவர் தாங்கள் மட்டுமே! இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவர் தாங்களே! நான் மகிழ்ச்சி பொங்கக் கூறிய ‘எம்பெருமான்’ என்னும் திருநாமம் என்றென்றும் உமக்கு நிலைத்து, நீங்கள் நீடூழி வாழ வேண்டும் – என்று கூறியவர் யார்?
A) இராமானுசர்    B) பூரணர்        C) முதலியாண்டான்        D) கூரேசர்

64. பூரணர் அவர்களின் மகன் பெயர் என்ன?
A) செளம்ய நாராயணன்    B) முதலியாண்டான்    C) கூரேசர்      D) இவற்றில் ஏதுமில்லை

65. சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டார்?
A) இராமானுசர்    B) முதலியாண்டான்    C) கூரேசர்    D) இவற்றில் ஏதுமில்லை

66. பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து _______________?
A) திருமந்திரம்        B) மாந்திரீகம்            C) யோக ஞானம்    D) தீட்சை விதி

67. கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! (சிவகங்கை மாவட்டத்தின் பிரான் மலை (பறம்பு மலை)) – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
A) அகநானூறு            B) புறநானூறு            C) நற்றிணை

68.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.
II. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி    C) I, II இரண்டுமே சரி    D) I, II இரண்டுமே தவறு

69. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
I. பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.
II. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி    C) I, II இரண்டுமே தவறு       D) I, II இரண்டுமே சரி

70.சுவாமிகள் என்மேல் கோபம் கொள்ளக் கூடாது. தங்கள் விருப்பப்படியே தான் வந்துள்ளேன். தாங்கள் கூறிய தண்டு, கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே அடியவர்களாகிய எங்கள்மேல் கோபம் கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும், என்று இராமானுசர் கூறினார். இதில் தண்டு, கொடி என குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்?
A) மக்கள், புலவர்                B) கையில் வைத்திருக்கும் தடி, கொடி
C) கூரேசர், முதலியாண்டான்            D) இவர்களில் யாருமில்லை




Tuesday, March 12, 2024

March 12, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 25 Test - 10th std Tamil Unit 7

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 25 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std – Tamil Unit 7


1.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் _____________ ஆம் ஆண்டு, மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது. அந்த ஆண்டில்தான் காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத் _____________ ல் தொடங்கி வைத்தார்.
A) 1906, தென்னாப்பிரிக்கா        B) 1910, இந்தியா        C) 1915, இங்கிலாந்து        D) 1920, ரஷ்யா

2.வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு?
A) 1900            B) 1906            C) 1910            D) 1925

3.1906 ஆம் ஆண்டில் ஜூன் 26 ஆம் நாள், சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன் குப்பம் என்னும் பகுதியில் பிறந்த தலைவர் யார்?
A) சுத்தானந்த பாரதியார்    B) உ.வே. சாமிநாதர்    C) ம.பொ.சிவஞானம்        D) ஆனந்தரங்கர்

4.கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையவர் யார்? தந்தையார் பெயர் பொன்னுசாமி. அன்னையின் பெயர் சிவகாமி. பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம்.
A) சுத்தானந்த பாரதியார்    B) உ.வே. சாமிநாதர்      C) ம.பொ.சிவஞானம்         D) ஆனந்தரங்கர்

5. “ஏர் புதிதா” எனும் கவிதை _______________ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
A) பாரதியார் கவிதைகள்                B) தாயுமானவர் பாடல்கள்
C) கு.ப.ரா. படைப்புகள். (கு.ப.ராஜகோபாலன்)        D) பாரதிதாசன் கவிதைகள்

6. கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட மன்னன் யார்?
A) கணைக்கால் இரும்பொறை        B) இரண்டாம் இராசராச சோழன்
C) சுந்தர பாண்டியன்            D) கரிகாலன்

7. காந்தி – இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1929            B) 1930                C) 1931            D) 1932

8. _______________ ஆம் நாள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் ‘இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை _______________ இல் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி (காங்கிரஸ் கட்சி) ஒரு மனதாக நிறைவேற்றியது.
A) 1942 ஆகஸ்டு 8, பம்பாய்            B) 1940 ஆகஸ்டு 8, கொல்கத்தா
C) 1938 ஆகஸ்டு 8, சென்னை            D) 1936 ஆகஸ்டு 8, பஞ்சாப்

9.ம.பொ. சிவஞானம் அவர்கள் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் அவர் சந்தித்த தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் யார்?
A) வ.உ. சி, சுப்ரமணிய சிவா, பாரதியார்    B) காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம்
C) பெரியார், அயோத்திதாச பண்டிதர்        D) திரு.வி. க, ராஜாஜி

10.ம.பொ. சிவஞானம் அவர்கள் ஆகஸ்டு 13 ஆம் நாள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து _______________ சிறைக்கு மாற்றப்பட்டார்.
A) சென்னை        B) வேலூர்        C) அமராவதி            D) அந்தமான்

11. ம.பொ. சிவஞானத்தின் ‘_______________’ என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை (பாடப்பகுதி) தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
A) மக்கள் போராட்டம்          B) எனது போராட்டம்           C) நம் போராட்டம்    D) மாநிலப் போராட்டம்

12. _______________ செல்வர் என்று போற்றப்படும் ம.பொ. சிவஞானம் அவர்களின் காலம் _______________. இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்;
A) இசைச், 1904 – 1993        B) போராட்ட, 1905 – 1994    C) சிலம்பு, 1906 – 1995            D) கவி, 1907 – 1996

13.ம.பொ. சிவஞானம் அவர்கள் _______________ வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் _______________ வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்;
A) 1949 முதல் 1951; 1969 முதல் 1975        B) 1950 முதல் 1952; 1970 முதல் 1976
C) 1951 முதல் 1953; 1971 முதல் 1977        D) 1952 முதல் 1954; 1972 முதல் 1978

14. ம.பொ. சிவஞானம் அவர்கள், தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர். ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக _______________ ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார். தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை _______________ லும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.
A) 1966, தியாகராய நகர்    B) 1970, எழும்பூர்    C) 1972, ராயபுரம்    D) 1974, அண்ணா நகர்

15.‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே _______________?
A) திருப்பதியும் திருத்தணியும்            B) திருத்தணியும் திருப்பதியும்
C) திருப்பதியும் திருச்செந்தூரும்        D) திருப்பரங்குன்றமும் பழனியும்

16. ம.பொ.சி. க்கு பெற்றோர் இட்ட பெயர் _______________?
A) சிவஞானம்        B) ஞானப்பிரகாசம்        C) பிரகாசம்        D) பொன்னுசாமி

17. சிவஞானி என்ற பெயரே _______________ என நிலைத்தது.
A) சிவஞானம்        B) சிவப்பிரகாசம்    C) ஞானப்பிரகாசம்        D) பிரகாசம்

18. ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் _______________?
A) பொன்னுசாமி    B) சரவணன்        C) சரபையர்            D) சிவஞானி

19. ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் _______________?
A) கல்வி, கேள்வி    B) கல்வி, ஓவியம்    C) கலை, பண்பாடு    D) கலை, மேடைப்பேச்சு

20. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் _______________?
A) 1955 அக்டோபர் 10    B) 1957 ஆகஸ்டு 10    C) 1957 ஆகஸ்டு 10    D) 1949 அக்டோபர் 15

21. ‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் _______________?
A) என் பாதை        B) என் பயணம்        C) என் விருப்பம்    D) எனது போராட்டம்

22.சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் _______________?
A) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு        B) வள்ளலாரும் பாரதியும்
C) வள்ளலார் வகுத்த வழி            D) வள்ளலார் கண்ட சாகாக் கலை

23.மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் _______________?
A) தாமதமாக வந்தது        B) பாடப் புத்தகம் கொண்டுவராமை        C) படிக்காமை

24. மா.பொ. சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு _______________?
A) ஐந்தாம் வகுப்பு        B) இரண்டாம் வகுப்பு        C) ஆறாம் வகுப்பு       D) மூன்றாம் வகுப்பு

25. மா.பொ. சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் _______________?
A) அன்னை                  B) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
C) மங்கலங்கிழார்            D) மார்சல் ஏ. நேசமணி

26.. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் _______________?
A) மா. பொ .சி        B) செங்கல்வராயன்    C) மங்கலங்கிழார்    D) மார்சல் ஏ. நேசமணி

27. சரியானதைத் தேர்ந்தெடு.
I. வாஞ்சு – 1. மாநகரத் தந்தை       
II. செங்கல்வராயன் – 2. நீதிபதி
III. தேவசகாயம், செல்லையா – 3. மொழிவாரி ஆணையத் தலைமை
IV. சர்தார் கே.எம்.பணிக்கர் – 4. தமிழரசுக் கழகத் தோழர்கள்
A) I – 1; II – 2; III – 3; IV – 4            B) I – 3; II – 1; III – 4; IV – 2
C) I – 2; II – 1; III – 4; IV – 3            D) I – 4; II – 3; III – 2; IV – 1

28.முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது. வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா! காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு! பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு மாட்டைப் பூட்டி காட்டைக் கீறுவோம். ஏர் புதிதன்று, ஏறும் நுகத்தடி கண்டது, காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் கை புதிதா, கார் புதிதா? இல்லை. நாள்தான் புதிது, நட்சத்திரம் புதிது! ஊக்கம் புதிது, உரம் புதிது! – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்        C) வாணிதாசன்               D) கு.ப. ராஜகோபாலன்

29.மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து மண்புரளும், மழை பொழியும், நிலம் சிலிர்க்கும், பிறகு நாற்று நிமிரும். எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்; கவலையில்லை! கிழக்கு வெளுக்குது பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை – என்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) ஏர் புதிதா, கு.ப. ராஜகோபாலன் படைப்புகள்         B) வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
C) அழகின் சிரிப்பு, பாரதிதாசன்                D) குயில், பாரதியார் கவிதைகள்

30. கு.ப. ராஜகோபாலன் _______________ ஆம் ஆண்டில் பிறந்தார்?
A) 1901            B) 1902            C) 1903            D) 1904

31. கு.ப. ராஜகோபாலன் _______________ என்ற ஊரில் பிறந்தார்?
A) கோவில்பட்டி        B) மன்னார்குடி        C) கும்பகோணம்             D) மானாமதுரை

32. சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?
A) நெசவை        B) போரினை        C) வேளாண்மையை        D) கால்நடையை

33. தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது _______________?
A) கல்வி        B) உழவு            C) நெசவு        D) போர்

34. தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது _______________?
A) நாகரிகம்        B) கலை        C) உழுதல்        D) பொன் ஏர் பூட்டுதல்

35. பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் _______________?
A) சித்திரை        B) ஆனி        C) ஆடி            D) தை

36. ‘கடுகி செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள் _______________?
A) செல்லுதல்        B) மெதுவாக            C) விரைவாக        D) இயல்பாக

37. _______________ இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றதுபோல் ஆட்சி செய்தவன்.
A) இளஞ்சேரலாதன்                B) இரண்டாம் இராசராசன்   
C) இராஜேந்திர சோழன்            D) முதலாம் இராசராசன்

38. சங்க இலக்கியமான _______________ பாடல்களின் இறுதியிலுள்ள பதிகங்கள், மெய்க்கீர்த்திகளுக்கு முன்னோடி.
A) குறுந்தொகை        B) பரிபாடல்        C) கலித்தொகை    D) பதிற்றுப்பத்து

39.பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் _______________ எனப் பெயர் பெற்றது.
A) மெய்க்கீர்த்தி    B) நூல்சாவடி        C) ஏடு            D) இவற்றில் ஏதுமில்லை

40.யாருடைய காலந்தொட்டு மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது?
A) பல்லவர்        B) பாண்டியர்    C) முதலாம் இராசராசன்    D) இராஜேந்திர சோழன்

41. அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான். தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருக்கின்றான். தாயில்லாதோருக்குத் தாயாய் இருக்கின்றான். மகனில்லாதோருக்கு மகனாக இருக்கின்றான். உலகில் உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கின்றான். விழிபெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ் பெற்ற நூல் போலவும் அவன் திகழ்கிறான்; புகழ் அனைத்திற்கும் தலைவனாகி யாதும் புரிகின்றான் – இந்த கூற்று யாரைப்பற்றியது?
A) இராசராச சோழன்            B) கரிகாலன்   
C) கணைக்கால் இரும்பொறை        D) இரண்டாம் இராசராச சோழன்

42. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராசராசன் காலத் தமிழ் கல்வெட்டு, கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) கீழடி                    B) மதுரை திருமலை நாயக்கர் மகால்
C) பெரிய கோயில், தஞ்சாவூர்             D) இவற்றில் ஏதுமில்லை

43.இந்திரன் முதலாகத் திசைபாலகர் _______________ பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் _______________.
A) எட்டு, சோழன்    B) ஒன்பது, பாண்டியன்      C) பத்து, பல்லவ மன்னன்    D) ஆறு, சேரன்

44. சிலப்பதிகாரம் நூலின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர்    B) சேக்கிழார்        C) இளங்கோவடிகள்         D) கம்பர்

45. இன்று ‘எங்கும் வணிகம் எதிலும் வணிகம்’! பொருள்களை உற்பத்தி செய்வதைவிட சந்தைப்படுத்துவதில்தான் உலக நாடுகளும் தொழில் முனைவோரும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இன்று நேற்றல்ல; பண்டைக் காலந்தொட்டே வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன! அவற்றுள் ஒன்றே _______________.
A) கடைதெருக் காட்சி            B) வணிகம்பூர் காட்சி
C) மருவூர்ப்பாக்கக் காட்சி        D) இவற்றில் ஏதுமில்லை

46. வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்; பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்; தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும் – இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) ஒட்டக்கூத்தர்    B) சேக்கிழார்        C) கம்பர்        D) இளங்கோவடிகள்

47. பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்; கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சிலப்பதிகாரம்     B) பெரிய புராணம்    C) நாலடியார்        D) கலிங்கத்துப்பரணி

48. கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும் பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்; சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் – இந்தப் பாடல் வரியுடன் தொடர்புடைய காதை எது?
A) வழக்குரை காதை            B) இந்திரவிழா ஊரெடுத்த காதை
C) வரம் தரு காதை            D) ஊர்காண் காதை

49. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. சுண்ணம் – நறுமணப்பொடி       
II. காருகர் – நெய்பவர் (சாலியர்)
III. தூசு – பட்டு               
IV. துகிர் – பவளம்    V. வெறுக்கை – செல்வம்
A) I, II, III மட்டும் சரி                B) I, II, III, IV மட்டும் சரி   
C) I, II, III, IV, V அனைத்தும் சரி             D) I, II, V மட்டும் சரி

50. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. பாசவர் – வெற்றிலை விற்போர்       
II. ஓசுநர் – எண்ணெய் விற்போர்
III. மண்ணுள் வினைஞர் – ஓவியர்       
IV. மண்ணீட்டாளர் – சிற்பி
V. கிழி – துணி                   
VI. நொடை – விலை
A) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி             B) I, II, III, IV மட்டும் சரி
C) I, II, III, IV, V மட்டும் சரி                D) I, II, V, VI மட்டும் சரி

51. _______________ நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.
A) மதுரை        B) புகார்        C) தஞ்சை        D) அயோத்தி

52.சரியாகப் பொருந்தியது எது?
I. கள் விற்கும் – 1. உமணர்
II. மீன் விற்கும் – 2. வலைச்சியர்
III. வெண்மையான உப்பு விற்கும் – 3. பரதவர்
IV. எண்ணெய் விற்போர் – 4. ஓசுநர்
A) I – 2; II – 3; III – 1; IV – 4            B) I – 4; II – 3; III – 2; IV – 1
C) I – 3; II – 4; III – 1; IV – 2            D) I – 1; II – 2; III – 3; IV – 4

53. 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராசராசன் காலத் தமிழ் கல்வெட்டு, கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) கீழடி                    B) மதுரை திருமலை நாயக்கர் மகால்
C) பெரிய கோயில், தஞ்சாவூர்             D) இவற்றில் ஏதுமில்லை

54. இந்திரன் முதலாகத் திசைபாலகர் _______________ பேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் _______________.
A) எட்டு, சோழன்    B) ஒன்பது, பாண்டியன்        C) பத்து, பல்லவ மன்னன்       D) ஆறு, சேரன்

55. புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் _______________ வகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.
A) எட்டு         B) ஏழு            C) ஆறு            D) ஐந்து

56. இலக்கணக் குறிப்பு தருக? வண்ணமும் சுண்ணமும்
A) உவமைத் தொகை        B) எண்ணும்மை    C) முற்றும்மை         D) உம்மைத்தொகை

57. இலக்கணக் குறிப்பு தருக? பயில்தொழில்
A) உவமைத் தொகை        B) எண்ணும்மை     C) வினைத்தொகை              D) உம்மைத்தொகை

58. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
II. மயங்கு – பகுதி
III. இ(ன்) – இறந்தகால இடைநிலை; ‘ன்’ புணர்ந்து கெட்டது;
IV. ய் – உடம்படுமெய்; அ – பெயரெச்ச விகுதி;
A) I, II மட்டும் சரி                    B) II, III மட்டும் சரி
C) III, IV மட்டும் சரி                    D) I, II, III, IV அனைத்தும் சரி

59. “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்” – ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு. இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A) திருத்தணிகையுலா, கந்தப்ப தேசிகர் (19 ஆம் நூற்றாண்டு)
B) நல்லூர்ப் புராணம், வைத்திய நாத தேசிகர்
C) பிரயோக விவேகம், சுப்பிரமணிய தீட்சிதர்
D) இவற்றில் ஏதுமில்லை

60. பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி – பற்றிய சரியான கூற்று எது?
I. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர். தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்.
II. சிறுமலையின் இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால் குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன.
III. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம். கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.
IV. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் (சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி          D) I, II, III, IV அனைத்தும் சரி

61. உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்). உரைப்பாட்டு மடை என்பது _______________ நூலில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.
வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம், இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
A) பெரிய புராணம்        B) திருக்குறள்        C) சிலப்பதிகாரம்

62. சிலப்பதிகாரத்தில் _______________ காண்டத்தில் இந்திரவிழா ஊரெடுத்த காதை உள்ளது.
A) மதுரை காண்டம்        B) புகார் காண்டம்        C) வஞ்சிக் காண்டம்

63.ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. _______________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க் காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும், _______________ காதைகளையும் உடையது; கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது. _______________ காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக்காப்பியங்கள் எனவும் அழைக்கப்பெறுகின்றன.
A) மூவேந்தர், முப்பது, மணிமேகலை        B) தேவர்கள், ஐம்பது, வளையாபதி
C) முனிவர்கள், நூறு, குண்டலகேசி        D) இயற்கை, அறுபது, கலிங்கத்துப்பரணி

64. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். _______________ மரபைச் சேர்ந்தவர். மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார், _______________ கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.   
A) சோழ, மாதவி                B) சேர, கோவலன் கண்ணகி
C) பாண்டிய, ஆதிரை            D) பல்லவ, கவுந்தியடிகள்

65. தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ.நா. அவையில் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர், ‘காற்றினிலே வரும் கீதமாய்’ மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர். இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர் யார்?
A) எம். எஸ். சுப்புலட்சுமி    B) சித்ரா        C) லதா மங்கேஷ்கர்    D) ஜானகி   

66.பொது வெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர்; நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர்; இவர் இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்; இவர் யார்?
A) பத்மினி        B) பாலசரசுவதி        C) மோகனாம்பாள்        D) ராஜலட்சுமி

67. நம் இந்திய நாட்டு நடுவண் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு தமிழக அரசின் “ஔவை விருதையும்” தூர்தர்ஷனின் “பொதிகை விருதையும்” பெற்றுள்ளார். அண்மையில் “தாமரைத்திரு விருதையும்” பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் – இவர் யார்?
A) சின்னப்பிள்ளை                B) எம். சாரதா மேனன்        
C) சாந்தி ரங்கநாதன்            D) திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி

68. நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் _______________?
A) பாரதியார்        B) கம்பர்        C) இளங்கோவடிகள்        D) உமறுப்புலவர்

69. கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர் _______________?
A) காவிரிப்பூம்பட்டினம்    B) திருவரங்கம்        C) உறையூர்    D) கொடும்பாளூர்

70. அழகர் மலை என்பது _______________?
A) திருவரங்கம்    B) திருமால்குன்றம்        C) திருப்பரங்குன்றம்         D) குன்றக்குடி


 

March 12, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 24 Test - 10th std Tamil Unit 6

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 24 Test
 
 கேள்விகள் : 55                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

 10th std – Tamil Unit 6


1.இசைக்கலைஞர்கள், 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் – கீழ்க்கண்டவற்றுள் எங்கு உள்ளது?
A) தஞ்சாவூர்        B) கழுகு மலை    C) திருப்புடை மருதூர்        D) ஆதிச்சநல்லூர

2. “நீரற வறியாக் கரகத்து” – என்ற _______________ நூலின் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறுகிறது.
A) அகநானூறு        B) புறநானூறு        C) கலித்தொகை        D) திருக்குறள்

3. சிலப்பதிகாரத்தில் _______________ ஆடிய _______________ வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது. இதுவே கரகாட்டத்திற்கு அடிப்படை என்றும் கருதப்படுகிறது. இது தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது.
A) மாதவி, பதினொரு        B) ஆதிரை, நூறு    C) கண்ணகி, ஐம்பது         D) அறவண அடிகள், முப்பது

4. மயிலாட்டம் பற்றிய சரியான கூற்று எது?
I. மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டமாகும். நையாண்டி மேளம் இசைக்க, காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டுவர்.
II. மயிலாட்டம் பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தில் விளக்கிக் கூறுகிறார்.
III. ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல் ஆகிய அடவுகளைக் கலைஞர்கள் இவ்வாட்டத்தில் ஆடிக்காட்டுவர்.
IV. கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
A) I, II, III மட்டும் சரி            B) I, III, IV மட்டும் சரி             C) I, III மட்டும் சரி

5. பொய்க்கால் குதிரையாட்டம் – பற்றிய சரியான கூற்று எது?
I. பொய்க்கால் குதிரையாட்டம் கரகாட்டத்தின் தாய் ஆட்டமாகக் கருதப்படுகிறது.
II. “போலச்செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
III. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
IV. கலைஞர்கள் தங்கள் கால்களை மறைக்கும் உயரத்திற்குத் துணியைக் கட்டிக் கொள்கின்றனர். காலில் சலங்கை அணிந்தும் அரசன் அரசி உடையணிந்தும் கிரீடம் அணிந்தும் ஆடுகின்றனர். குதிரைமேல் ஏறிப் பயணம் செய்வது போன்று கடிவாளத்தை ஆட்டியும் காலை உயர்த்தியும் நான்கு புறமும் ஓடியும் ஆடுகின்றனர்.
A) I, II, III, IV அனைத்தும் சரி        B) I, II, III மட்டும் சரி    C) II, III, IV மட்டும் சரி       D) I, IV மட்டும் சரி

6. பொய்க்கால் குதிரையாட்டத்திற்குப் பாடல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. நையாண்டி மேளமும் நாகசுரமும் இசைக்கப்படுகின்றன. பொய்க்கால் குதிரையாட்டம் _______________ மாநிலத்தில் கச்சிகொடி என்றும் _______________ மாநிலத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது.
A) பீகார், ஒடிசா               B) இராஜஸ்தான், கேரளம்        
C) பஞ்சாப், கர்நாடகம்            D) ஆந்திரா, குஜராத்

7.“தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” என்று, தப்பாட்ட இசை குறித்து _______________ நூலில் ______________ ஆசிரியர் கூறியுள்ளார். இதனைப் ‘பறை’ என்றும் அழைப்பர்.
A) கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்        B) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
C) திருவாசகம், மாணிக்கவாசகர்            D) திருப்புகழ், அருணகிரிநாதர்

8. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி பறை. _______  நூல் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது. மேலும் பறையாடல் பற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
A) திருக்குறள்        B) தொல்காப்பியம்        C) புறநானூறு        D) அகநானூறு

9. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? கலைஞாயிறு என்று இவர் அழைக்கப்படுகிறார். இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் இவரது நாடகங்கள் நடத்தப்பட்டன. இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றவர், இவர்.
A) பாவலரேறு பெருஞ்சித்திரனார்    B) நா. பிச்சமூர்த்தி        C) சி.சு. செல்லப்பா      D) ந. முத்துசாமி

10. பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. _______________ நூலில் மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
A) வளையாபதி        B) மணிமேகலை    C) நாலடியார்        D) திருக்குறள்

11. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் ______________ பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது.
A) ஒயிலாட்டம்        B) மயிலாட்டம்        C) தோற்பாவைக் கூத்து    D) கரகாட்டம்

12. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில், ‘இராச சோழன் தெரு’ என்பது இன்றும் உள்ளது. இது மாமன்னன் இராசராச சோழன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட சிறப்பினை உணர்த்துகின்றது.
A) இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்          B) மூன்றாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்
C) நான்காம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்            D) ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர்

13. பொருத்தமானதைத் தேர்ந்தெடு – ஆட்டம் மற்றும் இசைக்கருவிகள்.
I. கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
II. மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலக், தப்பு
III. ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
IV. தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை
A) 4, 3, 2, 1        B) 1, 2, 3, 4        C) 3, 4, 1, 2    D) 2, 1, 4, 3

14. பொருத்தமானதைத் தேர்ந்தெடு.
I. மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
II. ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
III. புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது.
IV. தெருக்கூத்து – 4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலை
A) 4, 1, 3, 2        B) 3, 4, 2, 1        C) 1, 2, 4, 3        D) 4, 3, 1, 2

15. தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது பொது மரபு?
A) மூன்று முதல் பதின்மூன்று    B) எட்டு முதல் பத்து    C) பத்து முதல் பதின்மூன்று    D) எட்டு முதல் பதின்மூன்று

16. கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
A) தலை ஆட்டம்    B) கும்பாட்டம்        C) சதுராட்டம்        D) சாமியாட்டம்

17. கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
A) 12            B) 2        C) 24            D) வரையறை இல்லை

18.கரகாட்டத்தின் துணையாட்டம் _______________?
A) மயிலாட்டம்        B) ஒயிலாட்டம்        C) காவடியாட்டம்    D) தேவராட்டம்

19.காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் _______________?
A) சோலை        B) பாரந்தாங்கும் கோல்        C) கால்            D) காவல்

20. இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது _______________?
A) கரகாட்டம்        B) மயிலாட்டம்    C) காவடியாட்டம்        D) ஒயிலாட்டம்

21. ஒயிலாட்டத்தை இரு வரிசையாக நின்றும் ஆடுகின்றனர்.
A) இரண்டு        B) நான்கு        C) ஆறு            D) எட்டு

22.தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
A) ஆண்கள்        B) பெண்கள்        C) சிறுவர்கள்

23. தேவராட்டம், _______________ ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
A) அரசர்கள்        B) புலவர்கள்        C) பாணர்கள்        D) வானத்துத் தேவர்கள்

24.உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது _______________?
A) டோலக்        B) சிங்கி        C) தேவதுந்துபி        D) தப்பு

25. தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை _______________?
A) கரகாட்டம்        B) மயிலாட்டம்    C) சேர்வையாட்டம்        D) தேவராட்டம்

26. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை _______________?
A) கரகாட்டம்        B) மயிலாட்டம்    C) சேர்வையாட்டம்         D) பொம்மலாட்டம்

27.சேர்வையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
I. சேவைப்பலகை    
II. சேமக்கலம்        
III. ஜால்ரா
A) I மட்டும் சரி        B) I, II மட்டும் சரி    C) II, III மட்டும் சரி    D) I, II, III அனைத்தும் சரி

28. _______________ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
A) போலச் செய்தல்    B) இருப்பதைச் செய்தல்    C) மெய்யியல்        D) நடப்பியல்

29. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
A) மயிலாட்டம்        B) ஒயிலாட்டம்       C) பொய்க்கால் குதிரையாட்டம்        D) காவடியாட்டம்

30.கீழ்க்கண்டவற்றுள், மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் ஆட்டம் எது?
A) காவடியாட்டம்    B) மயிலாட்டம்        C) ஒயிலாட்டம்       D) பொய்க்கால் குதிரையாட்டம்

31. ஒன்றைச் சொல்லுவதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி _______________?
A) பறை        B) தவில்        C) டோலக்        D) உறுமி

32. _______________ அம்மன் வழிபாடடின் ஒரு பகுதியாகவும் தெருக்கூத்து இருக்கிறது.
A) புலி ஆட்டம்        B) காவடியாட்டம்    C) தெருக்கூத்து            D) குடக்கூத்து

33. திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் _______________ வெளிப்படுத்தப்படுகிறது?
A) புலி ஆட்டம்        B) காவடியாட்டம்    C) தெருக்கூத்து        D) ஒயிலாட்டம்

34.அருச்சுனன் தபசு என்பது _______________?
A) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது        B) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
C) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது        D) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது

35. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) ஆறுமுக நாவலர்    B) தாயுமானவர்        C) மனோன்மணியம்    D) குமரகுருபரர்

36.சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும்; கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும். தொடக்கம் முதல் தமிழிலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய, இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன. ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது _______________! குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது _______________!
A) நாட்டுப்புறத்தமிழ், பிள்ளைத்தமிழ்        B) சிற்றிலக்கியம், சங்க இலக்கியம்
C) அற இலக்கியங்கள், நீதி நூல்கள்        D) இவற்றில் ஏதுமில்லை

37. செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) குற்றாலக் குறவஞ்சி        B) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்    C) தாயுமானவர் பாடல்கள்    D) திருவாசகம்

38. கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை – இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?  
A) மாணிக்கவாசகர்    B) கம்பர்    C) குமரகுருபரர்        D) ஒட்டக்கூத்தர்

39. செம்பொனடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப் பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப் பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக் கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக – இப்பாடல் வரியுடன் தொடர்புடைய பருவம் எது?
A) சப்பாணி        B) தால்        C) காப்பு        D) செங்கீரை

40. சொல்லும் பொருளும் சரியானது எது?
I. பண்டி – வயிறு    
II. அசும்பிய – ஒளிவீசுகிற
III. முச்சி – தலையுச்சிக் கொண்டை
A) I மட்டும் சரி        B) II மட்டும் சரி        C) II, III மட்டும் சரி          D) I, II, III அனைத்தும் சரி

41. திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பதிந்தாடட்டும் – இந்த கூற்றில் கூறப்படும் பருவம் எது?
A) செங்கீரை        B) வருகை        C) அம்புலி        D) முத்தம்

42.கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக – இப்பாடல் வரிகளை ஆராய்ந்து, கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது எனச் சரியாகப் பொருத்துக.
A) அற நூல்கள்        B) நீதி நூல்கள்        C) சிற்றிலக்கியம்        D) சங்க இலக்கியம்

43. இலக்கணக்குறிப்பு தருக? குண்டலமும் குழைகாதும்.
a. எண்ணும்மை        b. உம்மைத்தொகை         c. உவமைத்தொகை    

44.இலக்கணக்குறிப்பு தருக? ஆடுக.-   
a. தொழில் பெயர்     b. வினைமுற்று         c. வியங்கோள் வினைமுற்று

45. பகுபத உறுப்பிலக்கணம் – சரியானது எது?
I. பதிந்து – பதி + த் (ந்) + த் + உ        
II. பதி – பகுதி; த் – சந்தி (ந் – ஆனது விகாரம்)
III. த் – இறந்தகால இடைநிலை        
IV. உ – வினையெச்ச விகுதி
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) III, IV மட்டும் சரி         D) I, II, III, IV அனைத்தும் சரி

46.செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
A) இரண்டு        B) நான்கு        C) ஐந்து        D) ஒன்று

47. செங்கீரைப் பருவம்: செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை _______________ ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
A) 2-3            B) 4-5            C) 5-6

48. அணிகலன்கள் – சரியாகப் பொருந்தியது எது?
I. சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது
II. அரைநாண் – இடையில் அணிவது
III. சுட்டி – நெற்றியில் அணிவது
IV. குண்டலம், குழை – காதில் அணிவது
V. சூழி – தலையில் அணிவது
A) I, II, III, IV, V அனைத்தும் சரி       B) I, II, IV மட்டும் சரி      C) III, V மட்டும் சரி         D) II, III, V மட்டும் சரி

49. _______________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
A) 50            B) 63            C) 96            D) 100

50.கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது? இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது _______________? பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.   A) பிள்ளைத்தமிழ்        B) உலா        C) தூது            D) பரணி

51.குமரகுருபரரின் காலம் _______________ ஆம் நூற்றாண்டு.
A) 14    B) 15        C) 16         D) 17

52. குமரகுருபரர் எம்மொழிகளில் புலமை மிக்கவர்?
A) தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
B) தமிழ், அரேபிக், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
C) தமிழ், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
D) தமிழ், வங்காள, தெலுங்கு ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்

53. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் எவை?
I. கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
II. மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை
III. நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
IV. சிலையெழுபது, ஆசாரக்கோவை
A) I, II மட்டும் சரி        B) II, III மட்டும் சரி    C) I, II, III மட்டும் சரி           D) I, II, III, IV அனைத்தும் சரி

54.பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் _______________?
A) 8        B) 10        C) 12        D) 7

55.ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
A) சிற்றில்            B) சிறுபறை        C) சிறுதேர்        D) கழங்கு


March 12, 2024

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 23 Test - 10th std Tamil Unit 5

 

மேக்மீ மெடல்

TNPSC Group 4 பயிற்சி

Vyuha 1.0 TNPSC Group 4 - Day 23 Test
 
 கேள்விகள் : 50                                                  கால நேரம்: 60 நிமிடங்கள்
__________________________________________________________________

10th std - Unit 5


1.“ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் ____.
A) மணவை முஸ்தபா    B) மு.கு. ஜகந்நாதர்        C) பரிதிமாற் கலைஞர்    D) உ.வே.சாமிநாதர்

2. ‘ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்” என்கிறார்
A) மணவை முஸ்தபா    B) மு.கு. ஜகந்நாதர்        C) பரிதிமாற் கலைஞர்        D) உ.வே.சாமிநாதர்

3.மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் _______________ என்பவர் மரபியலில் (98) குறிப்பிட்டுள்ளார்.
A) திருவள்ளுவர்    B) வச்சணந்தி முனிவர்    C) குணவீர பண்டிதர்        D) தொல்காப்பியர்

4. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி யாது?
A) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது    
B) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
C) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
D) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

5.வடமொழியில் வழங்கி வந்த இராமாயண, மகாபாரதத் தொன்மச் செய்திகள் ________________ நூல்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.
A) சிற்றிலக்கியம்    B) ஐம்சிறும் காப்பியம்       C) ஐம்பெரும் காப்பியம்     D) சங்க இலக்கியம்

6. கீழ்க்கண்டவற்றுள் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்பட்டவை எவை?
A) பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்.
B) திருக்குறள், நாலடியார், நான்மணிக் கடிகை
C) ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்
D) இவற்றில் ஏதுமில்லை

7. _______________ மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டார்.
A) பிரெஞ்சு        B) ஆங்கிலம்        C) மலாய்        D) ஜெர்மன்

8. _______________ ஆம் நூற்றாண்டுவரை வடமொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின.
A) 16            B) 17        C) 18

9. ________________ வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
A) இரவீந்திரநாத தாகூர்    B) காசி நஸ்ருல்    C) கவிஞர் வித்யாபதி    D) அக்னிஹோத்ரி

10. ஒரு நாடு எவ்வளவு _______________ பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அதுபோல, ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.
A) காற்று ஆற்றல்    B) மின்னாற்றல்     C) சூரிய ஆற்றல்        D) நீர் ஆற்றல்

11.எங்கோ தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அதுதான் மொழிபெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன எல்லாம் மொழிபெயர்ப்பு வழியாகவே சர்வதேசத்தன்மை பெறுகின்றன – என்ற கூற்று யாருடன் தொடர்புடையது?
A) ராஜம் கிருஷ்ணன்        B) சுஜாதா    C) சா. கந்தசாமி     D) பெருஞ்சித்திரனார்

12. ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்தபோது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை _______________ மொழியில் எழுதினார். ______________ ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்றுவரையில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.
A) மலையாளம், 1943        B) இந்தி, 1949        C) சமஸ்கிருதம், 1950     D) பஞ்சாபி, 1955

13. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை மொழிபெயர்த்த வருடம் மற்றும் ஆசிரியர் – சரியானது எது?
I. 1949 – கணமுத்தையா மொழி பெயர்ப்பு    
II. 2016 – டாக்டர் என். ஸ்ரீதர் மொழி பெயர்ப்பு
III. 2016 – முத்து மீனாட்சி மொழி பெயர்ப்பு    
IV. 2018 – யூமா வாசுகி மொழி பெயர்ப்பு
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி    C) III, IV மட்டும் சரி      D) I, II, III, IV அனைத்தும் சரி

14. கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் _______________ என்று குறிப்பிடுவார்கள். மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
A) அறிவுசார் வளம்        B) இலக்கியப் பயன்        C) பயன்கலை        D) இவற்றில் ஏதுமில்லை

15. _______________ தன் வெளியீட்டு வடிவமாகக் கொண்டிருந்த தமிழ், அச்சு இயந்திரத்தின் வருகையை ஒட்டி மொழிபெயர்ப்பை எதிர்கொண்டபோது உரைநடை வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
A) செய்யுளையே                B) இலக்கணத்தையே        
C) இலக்கியத்தையே            D) இவற்றில் ஏதுமில்லை

16. ஒரு குறிப்பிட்ட சிறு குழுவில் பேசப்படும் மொழியில் இருப்பவையும் கூட நம்மை வந்தடைய வேண்டும். சிறு குழுவினர் பேசும் _______________ மொழிகளின் படைப்பாளர்கள் நோபல் பரிசு பெறுகிறார்கள். ஆனால் அந்தப் படைப்புகள் நம்மை எட்டுவதில்லை.
A) ஜப்பானிய        B) இலத்தீன்        C) ஐரோப்பிய        D) ஆப்பிரிக்க

17. தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழி பெயர்க்கப்பட்டு அறிமுகமாகியிருந்தால் தமிழின் பெருமை உலகெங்கும் முறையாகப் பரவியிருக்கும். _______________ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
A) ஹார்வர்ட்        B) ஆக்ஸ்போர்டு    C) ஸ்டான்போர்டு        D) நாளந்தா

18. தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும். இதனை _______________, “காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
A) இராஜராஜன்        B) குலோத்துங்கன்        C) கரிகாலன்     D) இரும்பொறை

19. “சென்றிடுவீர் எட்டுதிக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”, “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்ற பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
A) வாணிதாசன்    B) திரு.வி. க        C) பாரதிதாசன்    D) பாரதியார்

20.பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன் முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” முதலிய நூல்களும் அங்கு உள.” – என்று கூறியவர் யார்?
A) மனோன்மணியம்        B) தனிநாயக அடிகள்        C) திரு.வி. க     D) உ.வே.சாமிநாதர்

21. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?
A) சங்க இலக்கியம்         B) காவியம்    C) ஐம்சிறும் காப்பியம்   D) ஐம்பெரும் காப்பியம்

22. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது _______________?
A) சங்க இலக்கியம்     B) காவியம்    C) ஐம்சிறும் காப்பியம்    D) ஐம்பெரும் காப்பியம்

23. நீதிவெண்பா நூலின் ஆசிரியர் யார்?
A) கா.ப. செய்குதம்பிப் பாவலர்    B) ஆறுமுக நாவலர்    C) பரிதிமாற் கலைஞர்    D) திரு.வி.க

24. ‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?
A) எதுகை        B) மோனை        C) இயைபு        D) முரண்

25. செய்குதம்பிப் பாவலர் அவர்களின் காலம்?
A) 1874- 1950        B) 1884- 1960        C) 1894- 1970        D) 1904- 1980

26. கீழ்க்கண்டவற்றுள் யாருடைய நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன?
A) நா. கதிரைவேற்பிள்ளை    B) செய்குதம்பிப் பாவலர்    C) சாரண பாஸ்கரன்    D) கவி. கா. மு. ஷெரீப்

27. சதாவதானி என்பது _______________?
A) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது    B) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
C) நூறு படைவீரர்களை கொன்று குவிப்பது        D) ஆயிரம் பேருக்கு உணவிடுவது

28. திருவிளையாடற் புராணம் நூலின் ஆசிரியர் யார்?
A) பரஞ்சோதி முனிவர்        B) சயம் கொண்டார்    C) சேக்கிழார்        D) நாகுத்தனார்

29. “உமையை ஒரு பாகத்திற்கொண்ட மேலான பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா” – என்று கூறியவர் யார்?
A) அமைச்சர்        B) புலவர்        C) மன்னன்        D) இவர்களில் யாருமில்லை

30. காடனுக்கும் கபிலனுக்கும் – இலக்கணக்குறிப்பு தருக?
A) முற்றும்மை        B) எண்ணும்மை        C) உம்மைத்தொகை        D) உவமைத்தொகை

31. சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – என்பதைப் பற்றிய பாடல் இது. “மாசற விசித்த வார்புறு வள்பின் …” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நற்றிணை        B) குறுந்தொகை        C) அகநானூறு        D) புறநானூறு

32. பரஞ்சோதி முனிவர் _______________ (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
A) திருக்கழுக்குன்றம்        B) திருமறைக்காடு        C) திருவாவடுதுறை        D) திருவாலவாய்

33. வேப்ப மாலை அணிந்த மன்னன்?
A) சேரன்        B) சோழன்        C) பாண்டியன்        D) பல்லவன்

34. சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் _______________?
A) பார்வதி        B) திருமகள்        C) கலைமகள்        D) அலைமகள்

35. வினா எத்தனை வகைப்படும்?
A) 6        B) 7        C) 8        D) 9

36. மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து _______________ இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்?
அ) மரகத        ஆ) பொன்        இ) தன்            ஈ) வைர

37. “கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” (தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை) – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கலித்தொகை        B) பதிற்றுப்பத்து        C) ஐங்குறுநூறு        D) புறநானூறு

38. கல்விக்கண் திறந்தவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
A) சாரதா அம்மையார்        B) முத்துலெட்சுமி     C) அம்புஜத்தம்மாள்    D) இவர்களில் யாருமில்லை

39. மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும் கூட இருக்கிறது.
அவற்றைப் பற்றி _______________ விளக்கியிருக்கிறார்.
A) திருவள்ளுவர்        B) ஆறுமுக நாவலர்        C) தொல்காப்பியர்    D) நன்னூலார்

40. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) கொளல் வினா        B) கொடை வினா        C) ஏவல் வினா        D) அறி வினா

41. ‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல் – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) ஏவல் விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

42. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை. இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) ஏவல் விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

43. வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல். “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது – கீழ்க்கண்டவற்றுள், இந்த கூற்றுடன் தொடர்புடையது எது?
A) இனமொழி விடை        B) நேர் விடை        C) மறை விடை        D) சுட்டு விடை

44. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) சீவகசிந்தாமணி        B) நன்னூல்        C) புறநானூறு        D) மணிமேகலை

45. அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A) பாரதியார்        B) பாரதிதாசன்        C) வாணிதாசன்        D) நாமக்கல் கவிஞர்

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?
I. Emblem – சின்னம்
II. Intellectual – அறிவாளர்
III. Thesis – ஆய்வேடு
IV. Symbolism – குறியீட்டியல்
A) I, II மட்டும் சரி    B) II, III மட்டும் சரி        C) III, IV மட்டும் சரி    D) I, II, III, IV அனைத்தும் சரி

47. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) வெற்றி வேக்கை         B) புதிய ஆத்திச்சூடி        C) கொன்றை வேந்தன்    D) ஆத்திச்சூடி

48. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
A) தமிழ்        B) அறிவியல்        C) கல்வி        D) இலக்கியம்

49. உடன்பட்டுக் கூறும் விடை _______________?
A) சுட்டுவிடை        B) மறைவிடை        C) நேர்விடை        D) ஏவல்விடை

50. ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது _______________?
அ) வினாஎதிர் வினாதல்    ஆ) உற்றது உரைத்தல்        இ) உறுவது கூறல்    ஈ) இனமொழி விடை